மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி.. இந்த பள்ளிக்கு மட்டும் தற்காலிகமாக விடுமுறை.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளை திறக்க தமிழக அரசு முடிவு எடுத்து, கடந்த 1 ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு  முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டது.

இந்நிலையில்,  ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டி காந்தி நகரை சேர்ந்த 40 வயது பெண்ணிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் இருந்தால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவர் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதனிடையே அந்தப் பெண்ணின் 16 வயது மகன் புஞ்சை புளியம்பட்டி  அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவன் கடந்த 1ஆம் தேதி பள்ளிக்கு சென்று வந்துள்ளார். அந்த மாணவனுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஒரு மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், வகுப்பறையில் உள்ள 27 மாணவர்களுக்கு, 42 ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பள்ளி வளாகம் முழுவதும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு, இந்த பள்ளிக்கு தற்காலிகமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், ஆசிரியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா  பரிசோதனை முடிவு இன்று மாலை வெளியாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one student corona positive school leave


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->