காவல் படையில் ஒரு லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளது.! அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


மத்திய காவல் படையில் ஒரு லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் எல்லை பாதுகாப்பு படையில் 28 ஆயிரத்து 926 பணியிடங்களும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 26 ஆயிரத்து 500 பணியிடங்களும், மத்திய தொழில் பாதுகாப்பு படையில் 23 ஆயிரத்து 906 பணியிடங்களும், எஸ்.எஸ்.பி-யில் 18 ஆயிரத்து 643 பணியிடங்களும், இந்தோ திபெத் படையில் 5 ஆயிரத்து 784 பணியிடங்களும், அசாம் ரைபிள்ஸ் 7 ஆயிரத்து 328 பணியிடங்களும் காலியாக உள்ளன என்றார்.

பணி ஓய்வு, பணி விலகல் மற்றும் இறப்பு போன்றவற்றின் காரணமாக பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிட்டார்.

இதில் 60 ஆயிரத்து 210  காவலர் பணியிடங்களுக்கும், 2 ஆயிரத்து 534 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கும் பணியாளர் தேர்வு வாரியம் மூலமும், 330 உதவி காமென்டெண்ட் பணியிடங்களுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலமும் ஆட்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one lakh reserve police requirement in central government


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->