அரசுப் பணிகளுக்கு அனைத்திற்கும் ஒரே தேர்வு.! விரைவில் அமலுக்கு வருகிறது.! - Seithipunal
Seithipunal


ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், குரூப்-ஏ மற்றும் குரூப்-பி உள்ளிட்ட  பதவிப் பணியிடங்களுக்கு தகுதியான ஆட்களை தேர்வு செய்ய ஆண்டுதோறும் யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு மூலம் ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

இது வரை மத்திய அரசின் குரூப்-பி மற்றும் குரூப்-சி உள்ளிட்ட பணியிடங்களுக்கு பல தேர்வு வாரியங்கள் மூலமாக தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், இந்த பணியிடங்கள் ஒரே அமைப்பின் மூலமாக பொது தகுதி தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

அப்படி நடத்தப்படும் தேர்வில் பெறுகின்ற மதிப்பெண்ணை வைத்து மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியங்களான ரயில்வே, எஸ்எஸ்சி, வங்கி பணியாளர் என அனைத்து தேர்வாணையத்தின் பணியிடங்களுக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் ஜித்தேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

இத் தேர்வுகளில் எடுக்கப்படும் மதிப்பெண்களை மூன்று ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம் என கூறிய அமைச்சர், தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்களை பெற்றவர்களுக்கு மதிப்பெண்களை உயர்த்திக் கொள்ளும் விதமாக மேலும் இருமுறை வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்த பொது தகுதி தேர்வுகள் அனைத்தும் இணைய வழியில் நடத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறிய  அமைச்சர் ஜித்தேந்திர சிங், இதன் மூலம் குறுகிய காலத்தில் பணியிடங்கள் விரைவாக நிரப்பப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one government exams for all jobs


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->