தமிழகத்தில் முதல் முறையாக, 15 வயதில் தலைமை ஆசிரியையான மாணவி.! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மிளகனூரில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 7 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பள்ளியில் நேற்று ஒருநாள் தலைமை ஆசிரியராக காவ்யா என்ற மாணவி இருந்துள்ளார். 

பத்தாம் வகுப்பு படிக்கும் இந்த மாணவியை தலைமை ஆசிரியாக இருந்து இட்ட உத்தரவுகளை மாணவ-மாணவிகள் கேட்டு நடந்துள்ளனர். அதன்பிறகு ஆசிரியருடன் காவியா ஆலோசனை நடத்தியுள்ளார். பின்னர் ஒவ்வொரு வகுப்புக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். 

மாணவ-மாணவிகளிடம் படிப்பு மட்டுமின்றி விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் ஆர்வம் காட்டுமாறு அறிவித்துள்ளார். இவர் தலைமையாசிரியர் ஆனது எப்படி? நேற்று பெண்குழந்தைகள் தினம் என்பதால் அதன் கொண்டாட்டத்தின், ஒரு பகுதியாக மாணவி ஒருவரை ஒருநாள் தலைமை ஆசிரியராக நியமித்து உள்ளனர். இந்த வாய்ப்பு காவியாவிற்கு கிடைத்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one day head master for 10th class student


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->