இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை.!! - Seithipunal
Seithipunal


தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு தினங்களாக இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. 

கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருவதால், மீண்டும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் இரவும், பகலும் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருவாரூர், புதுக்கோட்டை, நெல்லை, நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர்,  தஞ்சாவூர், திருச்சி, , கடலூர், ராமநாதபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் ஆகிய 21 மாவட்டங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nov 27 school and college leave


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->