பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.! கல்வித்துறை புதிய அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


தற்பொழுது மேனிலை வகுப்புகள் ஆன பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் 600 மதிப்பெண்களுக்கு 6 பாடங்களுக்கு தேர்வு எழுதி வருகின்றார். இந்த நிலையில், ஆறு பாடங்களுக்கு பதில் 5 படங்களுக்கு மட்டுமே இனி தேர்வு நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

அதே வேளையில், 600 மதிப்பெண்கள் தேர்வு முறையும், அமலில் இருக்கும் எனவும் தெரிகிறது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில், "மேல்நிலை வகுப்புகளுக்கு தற்போதுள்ள 4 முதன்மைப் தொகுப்புகளுடன் புதிதாக மூன்று தொகுப்புகள் அறிமுகம் செய்யப்படுகிறது.

அதன்படி மாணவர்கள் கட்டாயம் மொழிப்பாடம், ஆங்கிலம் தவிர மீதமுள்ள நான்கு முதன்மை பாடங்களில் ஏதாவது மூன்று மட்டுமே தேர்வு செய்துகொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் நான்கு முதன்மை பாடங்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.

exam, seithipunal

இருப்பினும் தாங்கள் எழுதும் தேர்வு அனைத்து பாடங்களிலும், தேர்ச்சி பெற வேண்டும். இந்த புதிய மேம்படுத்தப்பட்ட பாடத்தொகுப்பு அடுத்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும்." என கூறப்பட்டுள்ளது.

உதாரணமாக மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களை மட்டும் தேர்வு செய்துகொள்ளலாம். இவர்கள் கணிதவியல் படிக்க வேண்டிய அவசியமில்லை. அதுபோல பொறியியல் படிக்க விரும்புபவர்கள் இயற்பியல், வேதியியல், கணிதம் மட்டும் தேர்வு செய்துகொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

news aanouncement about exams


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->