தனியார் பள்ளிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு!! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!  - Seithipunal
Seithipunal


சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவையை சேர்ந்த ஹேமலதா என்பவர் ஒரு வழக்கை தொடர்ந்தார். அந்த வழக்கு கோவை மாதா அமிர்தானந்தமயி அறக்கட்டளைக்கு சொந்தமான ஒரு பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக தொடுக்கப்பட்டது.

அந்த புகார் மனுவில், "பள்ளி நிர்வாகம், பாடப் புத்தகங்களுக்கு ரூ.5000 சீருடை மற்றும் லஞ்ச் பேக் உள்ளிட்ட பொருட்களுக்கு ரூ,500 ஆகியவை கேட்டு கட்டாயப்படுத்துவதாக" அவர் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், 'பள்ளி நிர்வாகங்கள் பெற்றோரை லஞ்ச் பேக், ஸ்கூல் பேக் உள்ளிட்டவைகளை வாங்கும்படி வற்புறுத்தக் கூடாது' என்றும், மேலும், சீருடைகள், புத்தகங்கள், காலணிகள் தவிர பிற பொருட்களை வாங்க நிர்ப்பந்திக்க கூடாது' என்றும் அறிவுறுத்தியது.

மேலும், இந்த வழக்கு தொடர்பான முழு விசாரணையை ஜூன் 10-ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new rules private schools


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->