புதியதாக 81 பாடப்பிரிவுகள் அரசாணையையை  வெளியிட்ட தமிழக அரசு!! - Seithipunal
Seithipunal


வரும் கல்வி ஆண்டில் தமிழகத்தில் 45 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 81 புதிய பாடப்பிரிவுகளை தொடங்குவதற்கான அரசாணையையை உயர்கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது.

உயர்கல்வி பயிலும் மாணவர்களில் எண்ணிக்கை அதிகரித்து வருதால் மாணவர் சேர்க்கையை கருத்தில் கொண்டு புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்திருந்தார். இதன்படி இளங்கலை பாடப்பிரிவில் 69 புதிய பாடங்களும், முதுகலை பாடப்பிரிவில் 12 புதிய பாடங்களும் தொடங்கப்பட உள்ளன. 

மேலும் 2019 முதல் 2022 வரையிலான 3 கல்வி ஆண்டுகளுக்குள் ௪௫௦ புதிய பேராசிரியர்களை நியமனம் செய்ய 78 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டிலேயே 167 பேராசிரியர்களை பணியமர்த்தி, 81 புதிய பாடப்பிரிவுகளிலும் மாணவர்களை சேர்த்து ஆகஸ்ட் 31-க்குள் வகுப்புகளை தொடங்க வேண்டும் என 45 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும் கல்லூரிக்கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new coureses in colleges


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->