தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.!! - Seithipunal
Seithipunal


கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாத இறுதி முதல் நாடுமுழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளது. தற்போது பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும், பள்ளிகள், கல்லூரிகள் இன்னும் பல மாநிலங்களில் திறக்கப்படவில்லை. 

இதற்கிடையே, பாதுகாப்பு வழிமுறைகளுடன் பள்ளிகள், கல்லூரிகளைத் திறக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது. நாட்டின் ஒரு சில மாநிலங்களில் பள்ளிகள்- கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் கடந்த 1-ம் தேதி முதல் கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டது.

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் வரும் 19 ஆம் தேதிமுதல் திறக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார். 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் நேற்று ஆணை பிறப்பித்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பள்ளிக்கு வரலாம். 98 சதவீத மாணவர்கள் பள்ளிக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளனர் எனக் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister sengottaiyan says about school open jan 19


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->