பள்ளிகள் திறப்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவல்.! - Seithipunal
Seithipunal


பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து ஏற்கனவே துறை ரீதியாக ஆலோசனை நடத்தப்பட்டது. 

கொரோனாவின் மூன்றாவது அலை வந்தால் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. கொரோனா தடுப்பூசி 12 12 வயதிற்கு மேற்பட்டோருக்கு இருந்தாலும், அது எந்த அளவுக்கு இருக்கும் என தெரியவில்லை. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும்போது எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதோ, அதே அளவுக்கு பள்ளி திறப்புக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய கட்டாய நிலையில் அரசு உள்ளது. 

முதலமைச்சர் மு க ஸ்டாலின் எடுக்கும் முடிவின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும். பள்ளிகள் திறப்பு குறித்து விரைவில் முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பார். திறப்புக்கும் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கு முன்பாக பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு, பணி நிரப்பு செய்யப்பட்ட பிறகுதான், எங்கெங்கு காலிப்பணியிடங்கள் உள்ளது என்ற விவரம் தெரியவரும் .அதன் அடிப்படையாக கொண்டு காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister anbil mahesh press meet about school reopen


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->