நாளை முதல் தொடக்க பள்ளிகள் திறப்பு., தமிழகத்தில் எப்போது?!  - Seithipunal
Seithipunal


கொரோனா மூன்றாவது அலை அச்சுறுத்தல் காரணமாக நீட் தேர்வை ரத்து செய்யும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று, மக்களவையில் திமுக உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பிய கேள்விக்கு, மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரவீன் பாரதி பதில் அளித்துள்ளார்.

இந்தியாவில் நோய்த்தொற்று பரவலின் தாக்கம் தற்போது குறைந்துள்ளது. இரண்டாவது அலையின் போது நாள் ஒன்றுக்கு சுமார் 4 லட்சம் பேர் வரை கொரோனா பாதிப்புக்கு உள்ளாகினர். இதனையடுத்து ஊரடங்கு தளர்வு குறைக்கப்பட்டது.

பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. நுழைவுத் தேர்வுகள் பலவும் தள்ளி வைக்கப்பட்டன.  நாடு முழுவதும் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. 

அந்த வகையில், மத்திய பிரதேச மாநிலத்தில் தனியார் பள்ளிகள், அரசு பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டது. பள்ளிகளில் கடைபிடிக்கவேண்டிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு, அதன்படி பள்ளி வகுப்புகள் அநடந்து கொண்டு இருக்கிறது.

இந்நிலையில், சுமார் 18 மாதங்களுக்குப் பிறகு அம்மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ளது

மாலை திறக்கப்படும் பள்ளி வகுப்புகளில் 50 சதவீதம் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.  முக கவசம் அணிவது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது, சமூக இடைவெளியுடன் பாடம் நடத்துவது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

இதேபோல், ஹரியானா மாநிலத்திலும் நாளை முதல், ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்படும் என்று அமம்நிலை கல்வித்துறை அமைச்சர் கன்வார் பால் குஜ்ஜார் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தை பொறுத்தவரை வரும் அக்., 1 அல்லது 3 ஆம் தேதிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க அதிகம் வாய்ப்புள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madhya pradesh school tomorrow


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->