LIC  உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு தேதி திடீர் மாற்றம்!  - Seithipunal
Seithipunal


மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி காப்பீட்டு நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டிருந்த உதவியாளர் பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வுக்கான தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் செயல்பட்டு வரும் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி காப்பீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு www.licindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பை அடுத்து  கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் அக்டோபர் 1 ஆம் தேதி வரையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. 

உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்ட போது உதவியாளர் பணிக்கான முதல்நிலை தேர்வு 2019 அக்டோபர் 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
இந்நிலையில், தற்போது உதவியாளர் பணிக்கான முதல்நிலைத் தேர்வு தேதி அக்டோபர் 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகார்வப்பூரவ அறிவிப்பு www.licindia.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 
 
இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு அக்டோபர் 15 ஆம் தேதி வெளியிடப்படும். இதனை விண்ணப்பதாரர்கள் www.licindia.in என்ற இணையதளத்திலேயே பதிவிறக்கம் செய்யதுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த தேர்வு தொடர்பாக மேலும் விவரங்களுக்கு:-  https://www.licindia.in/getattachment/Bottom-Links/Recruitment-of-Assistants-2019/Revised-Exam-dates.pdf.aspx?_ga=2.115787974.198813663.1570708793-


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lic assistance exam date changed


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->