இந்தியன் ரயில்வேவுடன் இணைந்து தொழில் தொடங்க ஓர் அறிய வாய்ப்பு .! உடனே பதிவு செய்யுங்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியன் ரயில்வே துறையுடன் இணைந்து டிக்கெட் விற்பனை செய்வதால்  மாதம் 80 ,000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். இதில் இந்தியன் ரயில்வேயின்  கீழ் செயல்பட்டு வரும் (ஐஆர்சிடிசி) ரயில் டிக்கெட் பதிவு முகவர்கள் ஃபிரான்ச்சிஸ் சேவைகளை வழங்கி வருகிறது.

இதனால்  ஐஆர்சிடிசி முகவர் உரிமையைப் பெறுபவர்கள் இணையதளம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு டிக்கெட் சேவை வழங்கி அதில் கமிஷன் தொகையைப் பெற முடியும். ரயில் டிராவல் சர்வீஸ் ஏஜெண்ட் என அழைக்கப்படும் இந்த உரிமையைப் பெற (ஐஆர்சிடிசிக்கு) ஒரு முறை கட்டணமாக 20,000 ரூபாயை செலுத்த வேண்டும். அதில் 5,000 ரூபாய் திருப்பி அளிக்கக் கூடிய டெபாசிட்டாக இருக்கும். இந்த சேவையைத் தொடர்ந்து வழங்க ஆண்டுக்கு 5,000 ரூபாயை கட்டணமாக ஐஆர்சிடிசிக்கு செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.

ஐஆர்சிடிசி முகவர்களாக இணைய விரும்புபவர்கள் 100 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பர் மூலம் ஒப்பந்தம் செய்யப்படும். டிமாண்ட் டிராஃப்ட் மூலம் 20,000 ரூபாய் ஒரு முறை பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் விண்ணப்பம், பான் கார்டு, வருமான வரி தாக்கல் விவரங்கள், முகவரி சான்றிதழ் போன்ற விவரங்களை ஐஆர்சிடிசிக்கு சமர்பிப்பதன் மூலம் எளிதில் முகவர்களாக  மாறலாம்.

கமிஷன் தொடர்பான விவரங்கள் ஐஆர்சிடிசி முகவராக ஆன பிறகு ஸ்லீப்பர் டிக்கெட் பதிவு செய்தால் 30 ரூபாயும், ஏசி டிக்கெட் என்றால் 60 ரூபாயும் கமிஷன் கிடைக்கும். குறைந்தது 10 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை ரயில் டிக்கெட்களுக்கு கமிஷன் வழங்கப்படும்.மேலும் ரயில்வே ஓய்வு அறை, விமான டிக்கெட் போன்றவற்றையும் ஐஆர்சிடிசி ஏஜெண்ட்களால் வாடிக்கையாளர்களுக்கு பதிவு செய்து வழங்க முடியும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian railway with us can start business


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->