தமிழகத்தில் 8,588 மாணவர்கள் குறித்த அதிர்ச்சி தகவல்! வெளியான அதிரடி உத்தரவு!  - Seithipunal
Seithipunal


பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து 8,588 மாணவர்கள் எவ்வித உயர்கல்விக்கும் விண்ணப்பிக்கவில்லை என்பதால், உயர்கல்வி தொடராத மாணவர்களின் விவரங்களை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து வெளியான அந்த உத்தரவில், 2021-22ம் கல்வி ஆண்டில் 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் இவ்வாண்டு 2022-23ல் உயர்கல்வி தெடர்ந்துள்ளனாரா என்பதனை அறிந்திடவும். அவ்வாறு உயர்கல்வி தொடரா மாணவர்கள் இருப்பின் அதற்கான காரணத்தை கண்டறிந்து, அதனை களைந்து, அவர்கள் உயர்கல்வி தொடர்ந்திட தேவையான வழிகாட்டுல்கள் வழங்க வேண்டும்.

79,762 மாணவர்களின் விவரங்களில் 8.588 மாணவர்கள் எவ்வித உயர்கல்விக்கும் விண்ணப்பிக்கவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. 

எனவே, இத்தகு மாணவர்களை ஒவ்வொருவராக தனித்தனியே தொடர்பு கொண்டு உரிய உயர்கல்வி வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள் மாநிலத் திட்ட இயக்ககத்தில் இருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இதற்கென 26.08.2022 அன்று நடைபெற்ற கூட்டத்தில் பெறப்பட்ட விவரங்களில் கூடுதலாக மாணவர்களின் EMIS எண். கல்வி மாவட்டம். மதிப்பெண். தொலைப்பேசி எண் உள்ளிட்ட விடுபட்ட தகவல்களை பள்ளிகளிலிருந்து பெற்று வழங்க வேண்டப்படுகிறது.

எனவே, சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இப்பணியினை முன்னுமை அடிப்படையில் மேற்கொண்டு விவரங்களை பெற்று உரிய படிவத்தில் மாநிலத் திட்ட இயக்ககத்திற்கு அனுப்ப கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.



இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

higher education Drop Issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->