2019-ல் நடைபெற்ற காவலர் தேர்வுக்கு தடை விதித்த நீதிபதி.! அதிரடியான உத்தரவை பிறப்பித்தது உயர் நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8,888 காலிப்பணியிடங்களுக்கு நடந்த இரண்டாம் நிலை காவலர் தேர்வில் முறைகேட்டு அதிரடி உத்தரவை பிறப்பித்த நீதிமன்றம்.

கடந்தாண்டு நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் தேர்வில் வேலூர் மாவட்டத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய நூற்றுக்கும் மேற்பட்டோர் முறைகேட்டில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியானது, வேலூர் மாவட்டத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய நூற்றுக்கும் மேற்பட்டோர் எழுத்து தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். முறைகேட்டில் ஈடுபட்ட அனைவரும் ஒரு குறிப்பிட்ட தனியார் பயிற்சி மையத்தில் பயின்றவர்கள் எனவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, இந்த தேர்வுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது, இதை விசாரித்த நீதிபதி சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய காவல்துறை தேர்வு நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து இந்த உத்தரவு எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 

இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது, அப்போது சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய காவல்துறை தேர்வை நிறுத்தி வைத்து உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.  

8,888 பணியிடங்களை நிரப்புவதற்கான செயல்முறைகளை தொடர சீருடை பணியாளர் தேர்வு வாரியத்திற்கு தடைவிதித்த தனி நீதிபதி அதற்கான காரணங்களை சரியாக விளக்கவில்லை என  தெரிவித்த தலைமை நீதிபதி அமர்வு குறிப்பிட்டனர்.

ஆகையால் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8,888 பணியிடங்களை நிரப்புவதற்கான இனி எந்த தடையும் இல்லை.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

high court judgement in police exam case


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->