குரூப் 4 தேர்வில் முறைகேடு புகார்.. தேர்வை ரத்து செய்தது TNPSC.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில், அரசு பணிகளில் சேர, தமிழக அரசு பணியாளா தோவாணையம்(டிஎன்பிஎஸ்சி) சார்பில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் குரூப் 4 ஆகிய இடங்களுக்கான தேர்வை ஒன்றிணைத்து தேர்வுகள் நடத்தப்பட்டது. கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தட்டச்சர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட குரூப் 4 பிரிவில் காலியாக இருந்த 6,491 இடங்களுக்கு பல இலட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர்.

இதையடுத்து 70 நாட்கள் கழித்து தேர்வு முடிவுகள் நவம்பர் 12 ஆம் தேதி டிஎன்.பிஎஸ்.சி இணைதளத்தில் வெளியிடப்பட்டன. இதையடுத்து தேர்வு முடிவுகள் வெளியானவுடன் குரூப் 4 பணியிடங்கள் 6,491லிருந்து 9,398 அதிகரிக்கப்பட்டது.

இந்தநிலையில், சமீபத்தில் வெளியான குரூப்-4 தேர்வு முடிவுகளில் முறைகேடு நடந்திருப்பதாக டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் புகார் தெரிவித்தனர். இது குறித்து தேர்வர்கள் எழுப்பி கேள்விகள், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள் 40 பேர் முதல் 100 இடங்களுக்குள் வந்தது எப்படி? அதுமட்டுமில்லாமல் அதே மையத்தில் தேர்வு எழுதிய 5 நபர்கள் தமிழக அளவில் குரூப்-4 தேர்வில் எப்படி என்ற குற்றச்சாட்டையும் தேர்வர்கள் முன்வைத்தனர்.

வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ராமநாதபுரத்தில் குறிப்பிட்ட தேர்வு மையத்தை தேர்வு செய்தது ஏன்? என நடைபெற்று முடிந்த குரூப்-4 தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக என விசாரிக்க வேண்டும் என கோரிக்கை தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கிடையே, குரூப் 4 தேர்வு முடிவுகளில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்க ராமநாதபுரம் ஆட்சியர் ஆணை பிறப்பித்தார்.

அதேபோல ராமநாதபுரம் கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள் 40 பேர் முதல் 100 இடங்களுக்குள் வந்த அது எப்படி? முதல் 5 இடங்களைப் பிடித்தவர்கள் ராமநாதபுரம் தேர்வு மையத்தை சேர்ந்தவர்கள் என்ற தேர்வர்கள் குற்றச்சாட்டு வைத்ததையடுத்து ராமநாதபுரம் கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதிவர்கள், தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் என அனைவரிடமும் டி.என்.பி.எஸ்.சி விசாரணை நடத்தியது.

டி.என்.பி.எஸ்.சி நடத்திய விசாரணையில் முறைகேடு நடந்திருப்பது உறுதிசெய்யப்பட்டு ராமநாதபுரம் கீழக்கரை தேர்வு மையம் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய 9 தேர்வு மையங்களின் நடந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அதிரடியாக முடிவு செய்துள்ளது. ராமேஸ்வரம் பகுதியில் 5 தனியார் பள்ளிகள், ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளிட்ட தேர்வு மையங்கள் ரத்து செய்யபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

group 4 exam cancel by tnpsc


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->