குரூப்-4 பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் தேதியை அறிவித்தது டிஎன்பிஎஸ்சி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில், அரசு பணிகளில் சேர, தமிழக அரசு பணியாளா தோவாணையம்(டிஎன்பிஎஸ்சி) சார்பில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் குரூப் 4 ஆகிய இடங்களுக்கான தேர்வை ஒன்றிணைத்து தேர்வுகள் நடத்தப்பட்டது. கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தட்டச்சர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட குரூப் 4 பிரிவில் காலியாக இருந்த 6,491 இடங்களுக்கு பல இலட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர். 

இதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி நடந்த குரூப் 4 தேர்வு முடிவுகள்70 நாட்கள் கழித்து தேர்வு முடிவுகள் நவம்பர் 12 ஆம் தேதி டிஎன்.பிஎஸ்.சி இணைதளத்தில் வெளியிடப்பட்டன.

இதற்கிடையே,  குரூப் 4 தேர்வு அறிவிக்கப்பட்டபோது 6,491 பணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டது. தேர்வு முடிவுகள் வெளியான பின்னர்  6,491 பணியிடங்களில் இருந்து  9,398 பணியிடங்களாக அதிகரிக்கப்பட்டது. 

இந்தநிலையில், குரூப்-4 பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள், சான்றிதழ்களை, நாளை முதல் 18ம் தேதிக்குள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

group 4 document verification date announced


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->