தனியார் பள்ளிகளால் கடுப்பாகி எச்சரிக்கை விடுத்த பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்.!  - Seithipunal
Seithipunal


தனி வகுப்பு, சிறப்பு வகுப்பு என்று மாணவர்களை பள்ளிக்கு அழைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் இருக்கும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் வருகின்ற 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட விடுமுறை காரணமாக வீட்டிலேயே அனைவரும் இருக்கின்றனர். இதன் காரணமாக ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு தேர்வு நடத்த திட்டமிடப்பட்டது. 

பள்ளி குழந்தைகளை வெளியில் அழைத்து செல்லாமல் வீட்டிற்குள்ளேயே வைத்திருக்கும்படி பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், சில தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவதாக புகார் வந்துள்ளது. 

இதுகுறித்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், "பாதுகாப்பாக வீட்டிலேயே மாணவர்கள் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் விடுமுறை அளிக்கப்பட்டது. தனியார் பள்ளி நிர்வாகம் இதனை தவராக பயன்படுத்தக்கூடாது. தனி வகுப்பு, சிறப்பு வகுப்பு என்ற பெயரில் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வரக்கூடாது. தமிழக அரசின் உத்தரவை மீறி செயல்படும் பட்சத்தில் குறிப்பிட்ட பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொதுத்தேர்வு எழுதும் 11,10,12ம் வகுப்பு மாணவர்கள் தவிர வேறு யாரையும் அழைக்க கூடாது. தொற்றுநோய் எச்சரிக்கை சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

government warning for private schools


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->