2 ஆயிரத்து 956 இடங்களுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டது தேர்வு வாரியம்.!  - Seithipunal
Seithipunal


அரசு பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கான டெட் தகுதி தேர்வு ஜூன் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி என பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 956 இடங்களுக்கான தேர்வு அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில், ஏற்கனவே விண்ணப்பப் பதிவு நடைபெற்றுள்ள 97 வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு வரும் பிப்ரவரி 15 மற்றும் 16 ஆம் தேதிகளிலும் முறைகேடு புகாரால் ரத்து செய்யப்பட்ட ஆயிரத்து 60 பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு மே மாதம் 2 மற்றும் 3-ம் தேதிகளிலும் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

government school teachers tet exam date announced


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->