இன்று முதல் முழு நேர வகுப்புகள் தொடக்கம்.. பள்ளி கல்வித்துறை உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கிற்கு பிறகு 9 வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை கடந்த அக்டோபர் மாதம் எட்டாம் தேதி முதல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வகுப்புகள் செயல்பட தொடங்கியது. அதன்பிறகு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜனவரி மாதம் 3ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. 

அதன்படி இரண்டு பிரிவுகளாக பிரித்து வாரத்தில் ஆறு நாட்களில் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மட்டும் வகுப்புகள் நடைபெற்று வந்தது. மாணவர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளி கடைப்பிடித்தும் பள்ளிகளுக்கு வந்து சென்றனர்.

இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி பள்ளிகளில் முழு நேர வகுப்புகள் நடத்த முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் இன்று முதல் முழு நேரம் செயல்படும். 

வழக்கமான கால அட்டவணை பின்பற்றி வாரத்தில் ஆறு நாட்களுக்கு முழு நேர வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு நேர வகுப்புகள் நடைபெற்றால் மாணவர்களுக்கு கொரோனா பரவும் அபாயம் இருப்பதால் அரசின் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

full day school open in puducherry


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->