இனி 11 ஆம் வகுப்பு சேரவும் நுழைவு தேர்வு.! மாணவர்கள் பேரதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பள்ளி, கல்லூரி ஆகிய கல்வி நிலையங்கள் மூடப்பட்டு இருந்தது. கொரோனா வைரஸ் தாக்கம் குறையாமல் இருந்ததால் பள்ளி, கல்லூரிகளை திறக்கும் நிலை ஏற்படவில்லை. 

எனவே, கடந்த ஆண்டு மாணவ, மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. அந்த வகையில், தற்போது இந்த ஆண்டும் 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் அனைவரும் தேர்வுகள் நடத்தப்படுமாலேயே தேர்ச்சி பெற்றதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி சட்டப்பேரவையில் தெரிவித்தார். 

ஆனால், மாணவர்கள் அனைவரும் தொடர்ந்து பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், 10 பத்தாம் வகுப்பு பொது தேர்வு மாணவர்களுக்கு மிக முக்கியமானது. 

இதில் எடுக்கப்படுகின்ற மதிப்பெண் பட்டியலை வைத்து தான், 11 ஆம் வகுப்பில் குறிப்பிட்ட பாடப்பிரிவில் சேர இயலும். எனவே, பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் 11 ஆம் வகுப்பு சேர்க்கைக்கு முன்பு நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

entrance exam for 11th admission


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->