வேகமெடுக்கும் பொறியியல் சேர்க்கை..!! முக்கிய பட்டியலை வெளியிடுகிறார் உயர் கல்வித் துறை அமைச்சர்!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள 550 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 2-ந்தேதி தொடங்கியது. கடந்த மாதம் 30-ந்தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டு பொறியியல் சேர்க்கை 1 லட்சத்து 33 ஆயிரம் பேர் மேல் விண்ணப்பித்த நிலையில் 

பொறியியல் ஆன்-லைன் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து அசல் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களுக்கான தரவரிசைப் பட்டியல், இன்று வெளியாகவுள்ளது, 2019-20-ஆம் ஆண்டுக்கான பி.இ. ஆன்-லைன் கலந்தாய்வுக்கு 1 லட்சத்து 33 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். 

விண்ணப்பித்த மாணவ மாணவியர்களுக்கு கடந்த ஜூன் 7-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை நடத்தப்பட்ட அசல் சான்றிதழ் சரிபார்ப்பில் விண்ணப்பித்திருந்த 1 லட்சத்து 33 ஆயிரம்  மாணவ மாணவியர்களில் 1 லட்சத்து 4 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

அசல் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற மாணவ மாணவியர்களின்  தரவரிசைப் பட்டியலை சென்னை தொழில்நுட்ப கல்வி இயக்குநரக வளாகத்தில், இன்று காலை நடைபெறும் நிகழ்ச்சியில் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட உள்ளார். மேலும்  ஜூன் 25-இல் கலந்தாய்வு தொடங்கப்பட உள்ளது. பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 3-ஆம் தேதி நடைபெறுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

engineering admission random list announced


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->