அரசு நீட் பயிற்சி மையங்களில் படித்த மாணவர்களுக்கு உற்சாக செய்தி.! - பள்ளிக்கல்வித்துறை.!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இருக்கின்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கின்ற நிலையில் பள்ளிக்கல்வி துறை புதிய சுற்றறிக்கையை வெளியிட்டு இருக்கின்றது. 

தமிழகத்தில் இருக்கின்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார். இதனை தொடர்ந்து, நடப்பு கல்வியாண்டிலேயே இந்த இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட இருப்பதாக கூறப்பட்டு இருக்கின்றது, 

இந்த நிலையில், 2017ம் வருடத்தில் இருந்து அரசின் இலவச நீட் பயிற்சி மையத்தில் படித்து தேர்வெழுதி தேர்ச்சி பெற்று இருக்கும் மாணவர்கள் அனைவரும் நடப்பு கல்வியாண்டில் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, 

இதுகுறித்து, அரசு பயிற்சி மையங்களில் படித்து தேர்ச்சி பெறுகின்ற மாணவர்களின் பட்டியலை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி இருக்கின்ற பள்ளிக்கல்வித்துறை, மாணவர்களை தொடர்பு கொண்டு கலந்தாய்வில் கலந்து கொள்ள உரிய அறிவுறுத்தல்களை வழங்க உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

education commission announcement about neet exam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->