10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கொரோனா நோய்த்தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடந்த வாரம் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறப்பித்திருந்தார். அந்த ஊரடங்கு கட்டுப்பாடு நேற்றுடன் முடிவடைந்தது. 

இதையடுத்து, கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும், பரவிவரும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் நோயை கருத்தில் கொண்டும், பொதுமக்களின் நலனை கருதியும், எதிர்வரும் பண்டிகை காலத்தில் பொது மக்கள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கூட்டம் கூடுவதால் நோய்த்தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்த கருத்தின் அடிப்படையில், தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு கூடுதல் கட்டுப்பாடுகளுடன் வருகின்ற 31ம் தேதி வரை  நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பால், கல்லூரிகளுக்கு வரும் 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பி ஜி, கலை-அறிவியல், பாலிடெக்னிக் கல்லூரி, இளநிலை-முதுநிலை மாணவர்களுக்கு வரும் 31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜனவரி 31ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சிகள் மூலம் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், பொது தேர்வு எழுதும் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு வழக்கம்போல நேரடி வகுப்புகள் தொடரும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

direct class for 10 11 12th


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->