வகுப்பறையாக மாறிய கோவில்.!! அரியலூர் அருகே வினோத சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தரேசபுரம் என்ற கிராமத்தில் 1952 ஆம் ஆண்டு தர்மலிங்கம் என்பவரால் அரசு உதவிபெறும் துவக்கப்பள்ளி ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்த பள்ளி 1964 ஆம் ஆண்டு நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

இந்த பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளி கட்டிடம் சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. பள்ளியை நடத்த முடியாமல் சிரமப்பட்ட தர்மலிங்கம், அரசிடம் இந்த பள்ளியை 2018 ல் ஒப்படைத்தார்.

மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என காரணம் காட்டி கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிகளை மூடுவதற்கு முயல்கின்றனர். ஆனால், இந்த கிராம மக்கள் புதிய கட்டிடம் கட்டி கல்வியைத் தொடர வேண்டும் என போராட்டம் நடத்தினர்.

இதனால், தற்போது இந்த பள்ளி பெருமாள் கோவில் வளாகத்திற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றனர். கிட்டத்தட்ட 80 மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். 3 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். ஓராண்டாகியும், சேதமடைந்த பள்ளி கட்டடம் புதுப்பிக்கப்படாமல் பெருமாள் கோவில் வளாகத்திலேயே அமர்ந்து படித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

class rooms change to temple


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->