அரியலூர், கள்ளக்குறிச்சிக்கு அனுமதியளித்த மத்திய அரசு! நிறைவேறும் நீண்டநாள் கோரிக்கை! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அரியலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மேலும் இரு மாவட்டங்களில் புதிதாக மருத்துவக்கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இரு மருத்துவக்கல்லூரிகள் அமைக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி ரூபாய் 650 கோடியில் மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்பில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படுகின்றன. 

தமிழகத்தில் ஏற்கனவே 9 புதிய மருத்துவக்கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் நீலகிரி திருப்பூர் நாமக்கல் விருதுநகர் திண்டுக்கல் ராமநாதபுரம் என ஆறு மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகளில் அமைக்க அனுமதியளித்த, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதற்கடுத்தபடியாக நாகப்பட்டினம் கிருஷ்ணகிரி திருவள்ளுர் மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி அளித்து உத்தரவிட்டது. 

இதையடுத்து மேலும் நான்கு மாவட்டங்களுக்கு மருத்துவ கல்லூரி கேட்டு தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்தது. கடலூர் காஞ்சிபுரம் அரியலூர் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு மருத்துவ கல்லூரி கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில், தற்போது அரியலூர் மற்றும் கள்ளகுறிச்சி மாவட்டங்களுக்கு மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி அளித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது, கடலூர் காஞ்சிபுரம் மாவட்டங்கள் புறக்கணிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது,


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central govt approved medical college for ariyalur and kallakurichi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->