ஜூன் 8-ந்தேதி நடைபெற இருந்த பி.எட் தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது!! உயர்கல்வித்துறை செயலாளரின் அதிரடி அறிவிப்பு!!  - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு ஆணையம் கடந்த மார்ச் 15-ந்தேதி முதல் ஏப்ரல் 5-ந்தேதி வரை ‘டெட்’ எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் கிடைக்கும் எனவும், இதனை ஆன்லைனிலேயே பதிவு செய்யலாம் எனவும் அறிவித்திருந்தது. 

அதன்பின்னர், விண்ணப்பதாரர்கள் இணையதளம் சரியாக வேலை செய்யவில்லை என கோரிக்கை வைத்ததனால், ஏப்ரல் 12-ந்தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டித்தது.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு ஆணையம் விண்ணப்பத்திற்கான கால அவகாசம் முடிவடைந்த பின்னர், வரும் ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும் என அறிவித்தது.

மேலும்,  பி.எட் இறுதி ஆண்டு தேர்வின் ஒரு தாளுக்கான பரீட்சை ஜூன் 8-ந்தேதி நடைபெற இருக்கின்றது. இதனால், ஒரே நாளில் இரண்டு தேர்வுகளை எழுத வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எனவே, இறுதி ஆண்டு பி.எட் படிக்கும் மாணவ- மாணவிகள் அதிர்ச்சிக்கு ஆளாகினர். 

மேலும், இரு தேர்வுகளையும் ஒரே நாளில் எழுதுவது சாத்தியமில்லை என்பதால் தேர்வுத் தேதியை மாற்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வித்துறை செயலாளர் "ஜூன் 8-ந்தேதி நடைபெற இருந்த பி.எட். தேர்வு இதன்காரணமாக ஜூன் 13-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக" தெரிவித்துள்ளார். இதன்காரணமாக மாணவ-மாணவிகள் நிம்மதி அடைந்துள்ளதாக தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BED exam date changed


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->