பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்! அமைச்சர் அன்பழகன் அறிவிப்பு!  - Seithipunal
Seithipunal


கொரோனாவில் இருந்து மீண்டு வந்த உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், நேற்று பொறியல் படிப்புக்கு விண்ணப்பிக்க நேற்று ஆன்லைன் பதிவு தொடங்கபடுவதாக அறிவித்த நிலையில், இன்று கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, “தமிழகத்தில் உயர் கல்வித்துறையின் கீழ் தற்பொழுது 109 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றது. இவற்றில் சுமார் 92,000 இளநிலை பட்ட வகுப்பு சேர்க்கை இடங்கள் உள்ளன. இதற்கு சுமார் 2 இலட்சம் மாணாக்கர்கள் விண்ணப்பிப்பார்கள்.

இதுபோன்று தமிழகத்தில் உயர் கல்வித்துறையின் கீழ் தற்பொழுது 51 அரசு பலவகை தொழில் நுட்பக் கல்லூரிகள் இயங்கி வருகின்றது. மற்றும் தொழில் வணிகத் துறையின் நிர்வாக கட்டுப்பாட்டிலும் தொழில்நுட்பக் கல்வித் துறையின் கல்வி பாடத்திட்டத்திலும் வரக்கூடிய 3 இணைப்பு கல்லூரிகளையும் சேர்த்து மொத்த ஒப்பளிக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 16,890. இதற்கு தோராயமாக 30,000 மாணாக்கர்கள் விண்ணப்பிப்பார்கள்.

பொதுவாக விண்ணப்பதாரர்கள் தாங்கள் சேர விரும்பும் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பக் கட்டணங்களை வங்கி வரைவோலையாக இணைத்து தபாலிலோ நேரிலோ சமர்ப்பிப்பார்கள். இதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை மாணாக்கர்கள் கல்லூரிகளுக்கு வரவேண்டிய சூழ்நிலை உள்ளது.

தற்பொழுது முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி புதிய முயற்ச்சியாக அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு தொழில்நுட்ப கல்லூரிகளுக்கும் ஆன்லைனில் வருகின்ற ஜூலை 20 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு www.tngasa.in மற்றும் www.tndceonline.org என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு www.tngtpc.com இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arts and Science College studies online applicatin


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->