பள்ளி ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவு.. கல்வித்துறை அமைச்சர் கண்டிப்பு.!  - Seithipunal
Seithipunal


பள்ளிகளிலிருந்து நடத்தப்படும் பாடங்களை ஆன்லைன் மூலமான மாணவர்கள் பாடங்களை புரிந்து கொண்டதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் கேரள கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளார். 

தற்போது நாடு முழுவதும் கொரோனா மற்றும் மைக்ரான் வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்றது. எனவே மத்திய மாநில அரசுகள் தீவிரமான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது. 

அத்துடன் முதல் படியாக கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.‌ கேரளாவில் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. 9 ஆம் வகுப்பு வரை ஜனவரி 21 முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

அதன் பின்னர் ஜனவரி 22 இல் இருந்து ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. பள்ளி ஆசிரியர்கள் அன்றாடம் பள்ளி வகுப்பறைகளை செல்ல வேண்டும் என்றும், பள்ளிகளிலிருந்து நடத்தப்படும் பாடங்களை ஆன்லைன் மூலமான மாணவர்கள் பாடங்களை புரிந்து கொண்டதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் கேரள கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

அத்துடன் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் அட்டவணைப்படி நடத்தப்படும் என்றும் அடுத்ததாக நடக்கவுள்ள பெற்றோர்-ஆசிரியர் கூட்டத்திற்கு பின்னர் அடுத்த கட்ட நகர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

announcement for school teachers


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->