ஜனவரி 21-ம் தேதி வரை அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடல்.. வெளியான அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மீண்டும் அனைத்து மாநிலங்களில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் தொற்றில் தாக்கம் எல்லை மீறி போகிறது. இப்போது இந்த கொரோனா பரவலை தடுக்க ஒரே தீர்வு ஊரடங்கு தான். 

சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி கடந்த ஜனவரி 3ஆம் தேதி முதல் செலுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா பரவல் காரணமாக மேற்கு வங்காளம், ஒடிசா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், டெல்லி, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்கள் மற்றும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், பீகாரில் அனைத்து பள்ளி, கல்லூரிகள், பயிற்சி மையங்கள் மற்றும் விடுதிகள் ஜனவரி 21ம் தேதி மூட பீகார் அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 % பணியாளர்களுடன் மட்டுமே செயல்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

all school and college closed in bihar


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->