தொடர் கன மழையால் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! அரசுப் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை ஆனது மிகத் தீவிரமாக பெய்து வருகிறது. கர்நாடகாவில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பும் அளவிற்கு கடும் கனமழை பெய்து வருவதால், அங்கு வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதே போன்றதொரு கன மழை கடந்த வருடம் பெய்த போதும் கர்நாடக மாநிலம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதே போல இந்த வருடமும் கனமழை பெய்து வருவதால் அந்த மாநிலம் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அதுவும் குறிப்பாக கர்நாடகாவின் மேற்கு பகுதி மற்றும் வடக்கு மாவட்டங்களில் கடுமையான மழை பெய்து வருவதால் செய்வதறியாது திணறி வருகின்றனர். 

இந்த நிலையில் மக்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு, வருகின்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை கீழ்கண்ட மாவட்டங்களுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.  கனமழையின் காரணமாக கீழே குறிப்பிட்டுள்ள மாவட்டங்களுக்கு விடுமுறை அளிப்பதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது 

தட்சிண கன்னடா, உத்தர கன்னடா, ராய்ச்சூர், பாகல்கோட், பெலகவி, சிக்கோடி, சிவமோகா, பிதர், ஹவேரி, கோடகு, கொப்பல், யத்கிர், காலபுர்கி, தார்வாட், உடுப்பி, கடக் ஆகிய மாவட்டங்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

6 days school and college leave for karnataka


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->