புதிதாக பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. அனைவரும் "ஆல் பாஸ்" .. அமைச்சர் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொது தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பி நிலையில், தமிழகத்தின் மாநில பாடத் திட்டத்தை பின்பற்றி வரும் பள்ளிகளில் நிகழாண்டு முதல் 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும் என்று கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. 

இதனை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்பு 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது.

இந்நிலையை பொதுத் தேர்வு தொடர்பாக செய்தியாளருக்கு பேட்டியளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு வைத்தாலும் மூன்றாண்டுகளுக்கு அனைவரும் தேர்ச்சி பெறுவர். 

மூன்று ஆண்டுகளில் மாணவர்கள் பொதுத்தேர்வு தயாராகவேண்டும். தேவைப்பட்டால் கூடுதல் கால அவகாசம் வழங்கப்படும். இந்த பொது தேர்வு குறித்து மாணவர்கள், பெற்றோர்கள் அச்சப்பட தேவையில்லை  என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 and 8 public exam all pass


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->