தமிழக அரசு பள்ளி மாணவர்கள் சீருடை மாற்றம்!! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!!  - Seithipunal
Seithipunal


தமிழக அரசு பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு வரும் கல்வியாண்டு முதல் புதிய சீருடைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. 

இது தொடர்பாக தற்போது வெளியாகியுள்ள அரசாணையில், "1 முதல் 5 வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு கரும்பச்சை நிற கால்சட்டையும், இளம் பச்சை நிற கட்டமிடப்பட்ட மேல் சட்டையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

அதே போன்று 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு சந்தன நிற கால் சட்டையும் சந்தன நிற கட்டமிடப்பட்ட மேல் சட்டையும், மாணவியருக்கு கூடுதலக சந்தன நிற மேல் கோட்டும் அறிமுகப்படுத்தப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், சத்துணவு சாப்பிடும் 40 லட்சத்து 66 ஆயிரத்து 217 மாணவ, மாணவியருக்கு இந்த ஆண்டு இலவச சீருடைகள் வழங்கப்பட உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2019 government school uniform changed


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->