10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு எப்போது.? அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

மேலும் இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு உரையாற்றினர். அப்போது அவர் கூறியதாவது, பிப்ரவரி 6ஆம் தேதி கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதற்கான மறு ஆலோசனை கூட்டம் வருகிற 31-ஆம் தேதி நடைபெறுகிறது. 

தற்போது 10 மற்றும் 12ஆம் வகுப்பு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 92 சதவீத மாணவர்கள் வருகின்றனர். மீதமுள்ள மாணவர்கள் ஆசிரியர்கள் மூலம் பள்ளிகளுக்கு அழைத்து வரப்படுவார்கள். வாரத்தில் ஆறு நாட்கள் பள்ளிகள் செயல்படும். ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை அறிவிக்கும் நாட்களை தவிர மற்ற நாட்களில் பள்ளிகள் செயல்படும். 

மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சியை தினமும் பள்ளி முடிந்தவுடன் மாலை 6 மணி முதல் 8 மணி வரை ஆன்லைனில் நடத்தப்படும். சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தேதி, அதற்கான அட்டவணை வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10th and 12th class exam date


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->