ஒரு விளக்குல இத்தனை விஷயமா.? அடேங்கப்பா.! - Seithipunal
Seithipunal


“விளக்கு எரிந்த வீடு வீணாய் போகாது ” என்று ஒரு பழமொழி உள்ளது. நாம் வீட்டிலும், கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா? தீபத்தின் சுடருக்கு தன்னை சுற்றி உள்ள தேவையற்ற கதிர்களை ஈர்க்கும் சக்தி உண்டு. 

அவ்வாறு ஈர்க்கும்போது நம்மை சுற்றி பாசிடிவ் எனர்ஜி அதிகரிக்கும். நம் சுற்றுப்புறம் தெளிவாகவும் பலத்தோடும் காணப்படும். இரண்டு நாள் வீட்டில் விளக்கேற்றாமல் இருந்தால் வீடே மயானம் போல் தோன்றும். எல்லோருமே சோர்வாக இருப்பார்கள். இதுவே விளக்கேற்றுவதன் தத்துவம்.

நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களில் மூலாதாரமும், சுவாதிஷ்டானமும் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுவதால் தூய்மையடைகிறது. அதேபோல மணிபூரகம், அனாஹதம் இரண்டும் நெய்விளக்கு ஏற்ற தூய்மை அடைந்து நற்பலன்களை அடைகிறது.

நம் உடலில் இருக்கும் நாடிகளில் சூரியநாடி, சந்திர நாடி, சுஷம்னா நாடி ஆகியவை மிக முக்கியமாக கருதப்படுகிறது. சூரியநாடி, நல்ல சக்தியையும் வெப்பத்தையும் தருகிறது. சந்திரநாடி குளுமையை தருகிறது. சுஷம்னா நாடி அந்த பரம்பொருளுடன் சம்பந்தப்பட்டு ஆன்மிக பாதையை வகுக்கிறது. 

நல்லெண்ணெய் விளக்கு ஏற்ற சூரியநாடி சுறுசுறுப்படைகிறது. நெய் விளக்கு சுஷம்னா நாடியை தூண்டிவிட உதவுகிறது. பொதுவாக நெய்தீபம் சகலவித சுகங்களையும் வீட்டிற்கு நலன்களையும் தருகிறது. 

திருவிளக்கு எப்போது வேண்டுமானாலும் ஏற்றலாம். இதற்கு தடையேதும் இல்லை. ஆனால் பொதுவாக மாலை 6.30க்கு ஏற்றுவதே நமது மரபு. இதை கருக்கல் நேரம் என்பர்.

சூரியன் மறைந்ததும் சில விஷ சக்திகள் சுற்றுசூழலில் பரவி வீட்டிற்குள்ளும் வர வாய்பிருக்கிறது. ஒளியின் முன் அந்த விஷ சக்திகள் அடிபட்டுபோகும். எனவே அந்நேரத்தில் விளக்கேற்றுகின்றோம் என்பது அறிவியல் உண்மை.

குறிப்பு:- 

மெழுகுவர்த்தி எற்றக்கூடாது. இதன் புகை உடல் நலத்தை கெடுக்கும். ஆஸ்துமா, மார்புபுற்றுநோய் இவைகளுக்கு மெழுகுவர்த்திதான் தாய். மண்ணெண்ணெய் விளக்கும் வேண்டாம்.

வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களை தினசரி விளக்கேற்றும்படி கேட்டுக்கொள்ளவேண்டும். இப்படி செய்தால் அவர்களின் முகப்பொலிவு பன்மடங்கு கூடும்.விளக்கேற்றிய வீடு வீண் போகாது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

y we put light in home


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->