மருதாணி ஏன் சிவக்கிறது தெரியுமா உங்களுக்கு?!  - Seithipunal
Seithipunal


வியப்பூட்டும் தகவல்கள்: 

மருதாணி ஏன் சிவக்கிறது தெரியுமா உங்களுக்கு?

மருதாணியை அரைத்தவுடன் அதில் உள்ள ஆந்தோசயனின் என்ற நிறமியால் தோல் சிவக்கிறது.

ஆயிரங்கால் பூச்சியைத் தொட்டால் சுருண்டுகொள்வது ஏன்?

மரவட்டையின் உடல் மென்மையானது. உடலைச் சுற்றி மென்மையான ஓடால் மூடப்பட்டிருக்கும். ஆனாலும் இது பாதுகாப்பு என்று சொல்ல முடியாது. ஆபத்து ஏற்படும்போது மரவட்டைகளால் வேகமாக ஓடித் தப்பிச் செல்ல முடியாது. அதனால் உணர்வு செல்களின் மூலம் ஆபத்தை உணர்ந்ததும் உடலை வட்டமாகச் சுருட்டிக்கொள்கிறது. அதன் பிறகு எளிதில் மரவட்டைக்குத் தீங்கு இழைத்துவிட முடியாது. மேலும் மரவட்டைகளுக்கு ஆயிரங்கால் பூச்சி என்று பெயர் இருந்தாலும் அவற்றுக்கு ஆயிரம் கால்கள் கிடையாது.

விமானங்களில் பயணம் செய்யும்போது ஏன் ஊற்றுப் பேனாவில் இருந்து மை தானாகவே வெளியே சிந்துகின்றது?

கடல் மட்டத்தில் இருந்து மேலே உயரச் செல்லச் செல்ல வளி அழுத்தம் குறைந்து செல்கின்றது. பேனாவில் உள்ள வளியின் அழுத்தம் கூடுதலாகவும், மேலே உயரத்தில் வளி அழுத்தம் குறைவாகவும் இருப்பதால் வளி விரிவடைந்து வெளியேறும். இதனால் மை வெளியே தானாகவே சிந்தி வெளியேறுகின்றது. இதனாலேயே சில விமான நிலையங்களில் ஊற்றுப் பேனாவில் உள்ள மையை வெளியே ஊற்றிவிடுமாறு எச்சரிக்கை செய்யப்படுகின்றனர்.

பாரமான மூட்டைகளை கைகளில் தூக்குவதைவிட முதுகில் தூக்குவது சுலபம் காரணம் என்ன?

பரப்பு அதிகரிக்கும் பொழுது அழுத்தம் குறையும். முதுகின் தொடு பரப்பு, கைகளின் பரப்பை விட அதிகம். இதனால் முதுகில் தூக்குவதால் மூட்டைகளினால் ஏற்படுத்தும் அழுத்தம் குறைகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Why Meganthu Gets Reddish 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->