கும்பகர்ணன் 6 மாதம் உறக்கம் எதற்கு.? சுவாரஸ்ய தகவல்.!  - Seithipunal
Seithipunal


கும்பகர்ணன் குறித்து தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அந்த அளவிற்கு அவர் மிகவும் பிரபலமானவர். ராமாயண கதையில் வரும் ராவணனின் சகோதரன் கும்பகர்ணன் அவர். நமக்கு தெரிந்தவரை ஆறு மாதங்கள் உறக்கம், ஆறு மாதங்கள் உணவு இப்படித்தான் அவர் குறித்து கேள்வி பட்டிருப்போம்.

ஆனால் கும்பகருணனுக்கு இப்படி ஒரு நிலைமை ஏன் என்பது குறித்து தற்போது காணலாம். கும்பகர்ணன் தன்னுடைய அண்ணன்கள் இராவணன் மற்றும் விபீஷணன் இருவருடன் சேர்ந்து வரம் வேண்டி தவம் செய்தார். இதன் காரணமாக மகிழ்ச்சி அடைந்த பிரமதேவன் தங்களுக்கு தேவையானவற்றை கேளுங்கள் என கூறினார்.

இராவணன் மற்றும் விபீஷணன் இருவரும் இந்த இந்திர சனா வரத்தை அருளுமாறு கேட்க, கும்பகர்ணன், நித்ர சனா வரம் வேண்டும் என கேட்டார். அதன் பின்னர் தன்னுடைய தவறை உணர்ந்த கும்பகர்ணன் அந்த வரத்தில் இருந்து விடுதலை கேட்க வந்த நேரத்தில் பிரம்மதேவன் வரத்தைத் தந்து விட்டதாக அறிவித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கும்பகர்ணன் மன்றாடி பிரம்ம தேவனிடம் கேட்க, வருடத்தில் ஆறு மாதங்கள் மட்டும் விலக்கு அளிக்க சம்மதித்தார். இப்படிதான் கும்பகர்ணன் ஆறுமாதம் உறக்கமும், ஆறுமாதம் உணவும் என்ற நிகழ்வு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

why kumpakarnan sleep in 6 month


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->