இன்று சந்திர கிரகணம்... இந்தியாவில் தோன்றுகிறது.. எங்கு தெரியும்.. எப்படி தெரியும்.. எப்படி பார்க்கலாம்? - Seithipunal
Seithipunal


கிரகணம் என்றாலே அனைவரையும் ஒரு நிமிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தி விடுகிறது. சமீபத்தில் சூரிய கிரகணம் வந்து முடிந்த நிலையில், 2020ஆம் ஆண்டிற்கான முதல் சந்திர கிரகணம் வருகிற ஜனவரி 10ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

சந்திர கிரகணம் :

சந்திர கிரகணம் என்பது நிலா பூமியின் பின்னால் கடந்து செல்லும்போது, பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து மறைத்துவிடுவதால் ஏற்படுவது ஆகும்.

2020ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நாளை ஜனவரி 10ஆம் தேதி இரவு 10 மணிக்கு மேல் நிகழ்கிறது. இது ஓநாய் சந்திர கிரகணம் அதாவது றுழடக ஆழழn நுஉடipளந என்றும் அழைக்கப்படுகிறது.

பொதுவாக கிரகண காலங்களில் கோவில்களில் நடை அடைக்கப்படும். கடந்த மாதம் நிகழ்ந்த சூரியகிரகணத்தின்போது 10 மணிநேரத்திற்கு மேல் கோவில் நடை அடைக்கப்பட்டது. ஆனால் நாளை நிகழ உள்ள சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியாது என்பதால் கோவில் நடை அடைப்பு பற்றிய அறிவிப்பும் வெளியிடவில்லை.

சந்திர கிரகணம் இந்தியாவில் தோன்றுமா?

வரும் ஜனவரி 10ஆம் தேதி (இன்று) ஏற்படும் சந்திர கிரகணமானது இந்தியாவில் தெரியாது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

ஆனால் ஐரோப்பிய நாடுகள், ஆசியாவின் பெரும்பாலான பகுதி, ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இந்த சந்திர கிரகணத்தைப் பார்க்க முடியும்.

சந்திர கிரகணம் அன்று என்ன செய்யலாம்?

உணவுகளில் தர்ப்பை புல்லினை போட்டு வைக்க வேண்டும்.

கிரகணம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே சாப்பிட்டுவிட வேண்டும்.

ஆலயங்கள் அனைத்தும் மூடி இருக்க வேண்டும். கிரகண நேரத்தில் ஆலய தரிசனம் கூடாது.

கிரகணத்தின்போது நவகிரக துதியை பாராயணம் செய்யலாம். அதுபோலவே சந்திர கிரகணத்திற்கான துதியையும் பாராயணம் செய்யலாம்.

கிரகண விமோசன காலத்தில் அதாவது, கிரகணம் முழுவதும் முடிந்த பிறகு ஸ்நானம் செய்துவிட்டு ஆலய தரிசனம் மேற்கொள்ள வேண்டும்.

பின்பு, ஆலய தரிசனம் செய்துவிட்டு தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

கிரகணம் முடிந்ததும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது நல்லது. ஆலய தரிசனம் மேற்கொண்ட பிறகே உணவு உட்கொள்ள வேண்டும்.

கிரகண காலத்தில் உடலில் எண்ணெய் தேய்ப்பது போன்ற செயல்களை செய்யக்கூடாது.

கிரகண சமயத்தில் தாம்பத்திய உறவை தவிர்க்க வேண்டும். ஒரு பெண் இந்தச் சமயத்தில் கர்ப்பம் தரித்தால் குறைபாடுள்ள குழந்தை பிறக்க நேரிடும்.

சந்திர கிரகண காலத்தில் வீட்டில் இருந்தபடியே இறைவனை துதித்து, இறை பாடல்களை பாராயணம் செய்வது நல்ல பலன்களை கொடுக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today eclipse


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->