கபடி.. வழுக்கு மரம்.. களைகட்டும்... பொங்கல் விளையாட்டுக்களை தெரிந்துகொள்வோமா?! - Seithipunal
Seithipunal


தமிழரின் பாரம்பரிய விளையாட்டுக்களின் மூலம் உணர்வுகளை கட்டுப்படுத்தவும், ஒன்றாக சேர்ந்து வாழும் இயல்பை வளர்த்துக்கொள்ளவும், வெற்றி தோல்விகளை சமமாக நினைக்கவும், ஒன்றாக சேர்ந்து விளையாட வேண்டும் என்ற எண்ணமும் தோன்ற வேண்டும் என்பதற்காக நமது முன்னோர்கள் இதை வகுத்து சென்றுள்ளனர்.

நமது பாரம்பரிய விளையாட்டுக்களில் மட்டும்தான் நடுவர், விளையாடுபவர்கள், வேடிக்கை பார்ப்பவர்கள் ஆகிய அனைவரிடமும் தாக்கங்கள் ஏற்படும். மேற்கத்திய நாடுகளின் விளையாட்டுக்களில் காணப்படாத பல அம்சங்களை நம் பாரம்பரிய விளையாட்டுக்களில் காணலாம்.

பொங்கல் வந்தாலே விளையாட்டுப் போட்டிகள் களைகட்டும். மேலும் சிறுவர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கும்.

அந்த வகையில், நாம் இன்று பொங்கல் தினத்தன்று கொண்டாடப்படும் சில விளையாட்டுக்களை பார்ப்போம்.

பொங்கல் தினத்தன்று விளையாடும் விளையாட்டுக்களில் சிறுவர்கள்தான் ஆர்வமாக இருப்பார்கள். அவர்களுக்காக ஓட்டப்போட்டி, சாக்குப்போட்டி, மியூசிக் சேர், பலூன் உடைத்தல் போன்ற விளையாட்டுக்கள் நடைபெறும்.

அதிலும் இளம்பெண்களுக்கு தண்ணீர் குடம் சுமத்தல், கோலப்போட்டிகள், ஸ்லோ சைக்கிள் ரேஸ், கயிறு இழுத்தல் என ஒவ்வொரு விளையாட்டும் உற்சாகமாக போகும்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றுதான் ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டு விளையாட்டில் மொத்தம் மூன்று வகைகள் உள்ளன. வேலி ஜல்லிக்கட்டு, வாடிவாசல் ஜல்லிக்கட்டு மற்றும் வடம் ஜல்லிக்கட்டு. இந்த விளையாட்டை பார்ப்பவர்களுக்கு மட்டுமில்லாமல் விளையாடுபவர்களுக்கும் த்ரிலாக இருக்கும்.

ஜல்லிக்கட்டு பல்வேறு பகுதிகளில் வெகு விமர்சையாகவும், மைதானத்தில் சீறிப்பாயும் காளைகளுடன், மைதானமே களைகட்டும் அளவிற்கு கொண்டாடுவார்கள்.

அடுத்து, வழுக்கு மரம் ஏறுதல் போட்டி பொங்கலில் இடம்பெறும் முக்கிய விளையாட்டுகளில் ஒன்று. நீண்டு உயர்ந்து வளர்ந்த பாக்கு மரத்தை நடு மைதானத்தில் ஊன்றி, வழுவழுப்பாக்கி குழுவாக இணைந்து மரத்தில் ஏறி உச்சியில் இருக்கும் பரிசு முடிப்பை தட்டிச் செல்வதுதான் இந்தப் போட்டி.

இதில் கலந்து கொள்பவர்கள் மரத்தின் உச்சிக்கு ஏற முடியாமல், கீழே வழுக்கி விழும் காட்சிகளை பார்க்கும்போது நமக்கு சிரிப்பாகத்தான் இருக்கும்.

தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையாக சிலம்பம் உள்ளது. இன்றும் பல கிராமங்களில் பொங்கல் திருவிழா காலங்களில் மைதானத்தில் சிலம்பச் சண்டை தவறாமல் நடைபெறும்.

பொங்கல் என்றாலே கிராமங்களில் விளையாட்டு போட்டிகள் நடைபெறும். இதில் காலம்காலமாக விளையாடப்பட்டு வரும் கபடி (சடுகுடு) விளையாட்டுதான் முக்கிய இடம் பெறும். இந்த விளையாட்டை எல்லோரும் விரும்பி பார்ப்பார்கள். ஏனென்றால் இந்த விளையாட்டு ஆர்வமாக இருக்கும்.

பொங்கல் பண்டிகையில் தவறாமல் இடம்பெறும் முக்கிய விளையாட்டு உறியடி. ஒருவருடைய கண்ணை கட்டிக்கொண்டு கையில் உள்ள கம்பால் மேலே இருக்கும் பானையை உடைக்க வேண்டும். இந்த விளையாட்டு பார்ப்பதற்கு கொஞ்சம் விறுவிறுப்பாக இருக்கும்.

ரேக்லா ரேஸ் எனப்படும் மாட்டு வண்டி பந்தயம். பொங்கல் காலத்தில் இரட்டை மாடுகள் பூட்டி நடைபெறுவதுதான் இந்த மாட்டு வண்டி பந்தயம். இதில் கலந்து கொள்ளும் மாட்டுவண்டிகள் சீறிப்பாய்ந்து செல்லும் காட்சிகள் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தும்.

பாரம்பரிய விளையாட்டுக்களுடன்., பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுங்கள்.!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilar veera vilaiyattu for pongal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->