நாளை சூரிய கிரகணம்... இந்த 5 நட்சத்திரக்காரர்களுக்கு தோஷம்... பயப்படாதீர்கள்..! - Seithipunal
Seithipunal


டிசம்பர் மாதம் 26ஆம் தேதியான நாளை சென்னை நேரப்படி காலை 08.08 மணி முதல் காலை 11.19 மணி வரை சூரிய கிரகணம் நடைபெறவுள்ளது.

சூரிய கிரகணம் அமாவாசை நாளில், சூரியன், சந்திரன், பூமி ஒரே நேர்க்கோட்டில் இருக்கும்போது ஏற்படுகிறது. அதாவது சூரியன், சந்திரன் இரண்டிலிருந்தும் வெளிச்சம் வராமல், ராகு அல்லது கேது மறைப்பதையே கிரகணம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

ராகு மறைக்கும்போது ராகு க்ரஷ்தம் என்றும், கேது மறைக்கும்போது கேது க்ரஷ்தம் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. பொதுவாக கிரகண தோஷம் கெடுபலன்களைத் தான் தரும் என்பார்கள். சூரிய கிரகண தோஷம்தான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் சொல்வதுண்டு.

குறிப்பாக கிரகண நாளில் கர்ப்பிணிப் பெண்கள் வெளியே வரக்கூடாது என கிரகண சாஸ்திரம் எடுத்துரைக்கிறது. இதன்பின் அறிவியல் ரீதியான காரணமும் உண்டு. அதாவது கிரகண நேரத்தில் பூமியின் மீது அதிக ஆதிக்கம் செலுத்தும் கதிர்வீச்சுகளால் கர்ப்பத்தில் உள்ள குழந்தைக்கு பாதிப்புகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு.

எனவேதான் கர்ப்பிணிகளை வெளியே விடமாட்டார்கள். கிரகண கதிர்வீச்சுகளால் பாதிக்கப்படும் குழந்தையின் உடலமைப்பில் சில மாறுதல்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு.

கிரகண தோஷத்தினால் ஏற்படும் பாதிப்புகள் :

குழந்தைப் பேறின்மை, கருச்சிதைவு ஏற்படுதல் அல்லது வீட்டில் இருக்கும் குழந்தைகள் அடிக்கடி நோய்வாய்ப்படுதல், தொடர்ந்து பெண் குழந்தைகளாகப் பிறப்பது, வீட்டில் தொடர்ந்து காரண, காரியமில்லாமல் நிலவும் பிரச்சனைகள், பணியிடத்தில் மற்றும் வியாபாரம் செய்யுமிடத்தில் தொடர்ந்து ஏமாற்றம், எவ்வளவு தான் சிறந்த முயற்சி எடுத்தாலும், கொஞ்சம் கூட அதற்குரிய பலன் கிடைக்காமல் இருத்தல், உடலாலும், மனதாலும் நோய் மற்றும் பல பிரச்சனைகள் சூழ்ந்தபடியே இருத்தல் என்று கெடுபலன்கள் நிகழக்கூடும்.

சூரிய கிரகணத்தால் தோஷம்... பரிகாரம் செய்துகொள்ள வேண்டிய நட்சத்திரங்கள்...!

கேட்டை

மூலம்

பூராடம் 

அஸ்வினி

மகம்

ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சாந்திப் பரிகாரம் செய்து கொள்வது நல்லது.
கிரகண பாதிப்பில் இருந்து விடுபட என்ன செய்யலாம்?

கிரகணத்தால் நமக்கு பாதிப்புகள் எதுவும் ஏற்படாமல் இருக்க சாஸ்திரங்கள் சில தற்காலிக ஆலோசனைகளை வழங்குகின்றன. அதன்படி, புண்ணிய நதிகளில் ஸ்நானம் செய்து தானங்கள் வழங்கலாம்.

முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம். மேலும் வீட்டிலுள்ள பூஜை அறையில் தெய்வ சிந்தனையுடன் கிரகணம் முடியும் வரை, ஜபங்கள், பாராயணங்கள் செய்யலாம்.

கிரகணத்தின் போது ஏற்படும் கதிர்வீச்சின் பாதிப்பில் இருந்து விடுபட, நாம் அணிந்த உடைகளை, நீரில் நனைத்து, துவைத்து விட்டு பின்பு, வீட்டைச் சுத்தப்படுத்துவது போன்றவற்றைச் செய்யலாம்.

கிரகணத்தின் போது என்ன செய்யக்கூடாது?

சூரிய கிரகணத்தை நேரடியாக காணக்கூடாது. 

சமையல் செய்யக்கூடாது. 

முக்கியமாக சாப்பிடக்கூடாது. 

தண்ணீர் அருந்தக்கூடாது. 

நகம் கிள்ளக்கூடாது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

suriya kirakanam for 5 star thosam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->