நாளை சூரிய கிரகணம்... ஆரம்ப நேரம்... முடிவு நேரம்... இதையெல்லாம் செய்யக்கூடாது! - Seithipunal
Seithipunal


டிசம்பர் மாதம் 26ஆம் தேதியான நாளை சென்னை நேரப்படி காலை 08.08 மணி முதல் காலை 11.19 மணி வரை சூரிய கிரகணம் நடைபெறவுள்ளது.

சூரிய கிரகணம்... ஆரம்பம்... மத்திமம்... முடிவு நேரம் :

சென்னை

ஆரம்பம் : 08.08 AM

மத்திமம் : 09.34 AM

முடிவு : 11.19 AM

காஞ்சிபுரம்

ஆரம்பம் : 08.08 AM

மத்திமம் : 09.33 AM

முடிவு : 11.18 AM

சூரிய கிரகணம் அன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? எனப் பார்ப்போம்.

கிரகணம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே சாப்பிட்டுவிட வேண்டும்.

உணவுகளில் தர்ப்பை புல்லினை போட்டு வைக்க வேண்டும்.

அசைவம் சாப்பிடக்கூடாது.

கிரகணத்தின்போது நவகிரக துதியை பாராயணம் செய்யலாம். அதுபோலவே சூரிய கிரகணத்திற்கான துதியையும் பாராயணம் செய்யலாம்.

பின்பு, ஆலய தரிசனம் செய்துவிட்டு தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

கிரகணம் முடிந்ததும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது நல்லது. ஆலய தரிசனம் மேற்கொண்ட பிறகே உணவு உட்கொள்ள வேண்டும்.

ஆலயங்கள் அனைத்தும் மூடி இருக்க வேண்டும். கிரகண நேரத்தில் ஆலய தரிசனம் கூடாது.

கிரகண காலத்தில் உடலில் எண்ணெய் தேய்ப்பது போன்ற செயல்களைச் செய்யக்கூடாது.

கிரகண சமயத்தில் தாம்பத்திய உறவை தவிர்க்க வேண்டும். ஒரு பெண் இந்தச் சமயத்தில் கர்ப்பம் தரித்தால் குறைபாடுள்ள குழந்தை பிறக்க நேரிடும்.

இதனை ஆராய்ந்துதான் சாஸ்திரங்கள் கிரகண காலத்திற்கென சில நியதிகளை வகுத்துள்ளன. இவற்றில் முக்கியமானவை கர்ப்பிணிப் பெண்களுக்குரியவைதான். கிரகண காலம் முடியும் வரை அறையை விட்டு வெளியே வரக்கூடாது. நகம் வெட்டக்கூடாது.

கிரகண விமோசன காலத்தில் அதாவது, கிரகணம் முழுவதும் முடிந்த பிறகு ஸ்நானம் செய்துவிட்டு ஆலய தரிசனம் மேற்கொள்ள வேண்டும்.

சூரிய கிரகண காலத்தில் வீட்டில் இருந்தபடியே இறைவனை துதித்து, இறை பாடல்களை பாராயணம் செய்வது நல்ல பலன்களை கொடுக்கும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு :

கர்ப்பிணிப் பெண்கள் சூரிய கிரகணத்தைப் பார்க்கக்கூடாது. கிரகணத்தின்போது உறங்கக்கூடாது. வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது.

எந்த வேலையும் செய்யாமல் தெய்வ சிந்தனையுடன் இருக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

மேலும், கிரகண நேரத்தின்போது வெளியே சென்றால் அவருக்கும், அவர்களுடைய குழந்தைக்கும் பாதிக்கக் கூடியதாக சில கதிர் வீச்சுகள் ஏற்படும். இதனால் பிறக்கும் குழந்தைக்கு சில ஊனங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

கிரகணத்தின்போது உணவு அருந்தக்கூடாது. கிரகணம் முடிந்த பிறகு குளித்து முடித்துவிட்டு கோவிலுக்குச் சென்று விட்டு பிறகு, உணவு அருந்தலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

solar eclipse 2019 special 2


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->