திருமணத்தில் வைக்கப்படும் 7 அடிகள் எதற்காக தெரியுமா? - Seithipunal
Seithipunal


திருமணத்தின்போது மணமகனும், மணமகளும் அக்னியை சுற்றி வலம் வருவார்கள். இந்த வலமானது 7 அடிகள் கொண்டதாக அமைய வேண்டும் என்பதே நியதி. ஆகவே, திருமணத்தில் வைக்கப்படும் 7 அடிகள் எதற்காக என்பதைப் பற்றி பார்ப்போம்.

திருமணத்தின் போது மணமகனும், மணமகளும் அக்னியை வலம் வருவதை, வடமொழியில் சப்தபதி என்று கூறுவார்கள். அதாவது ஏழு அடிகள் மணமகனும், மணமகளும் சேர்ந்து நடந்து வருவதைக் குறிக்கும் சொல் அது. அவ்வாறு ஏழு அடிகள் நடக்கும்போது மாப்பிள்ளை பெண்ணிடம் இறைவன் உனக்கு துணையிருப்பான் என்று கீழ்க்கண்டவாறு தனது பிரார்த்தனையைச் சொல்கிறார்.

முதல் அடி :

பஞ்சமில்லாமல் வாழ வேண்டும்.

இரண்டாவது அடி : 

ஆரோக்கியமாக வாழ வேண்டும்.

மூன்றாவது அடி : 

நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும்.

நான்காவது அடி : 

சுகத்தையும், செல்வத்தையும் அளிக்க வேண்டும்.

ஐந்தாவது அடி :

லட்சுமி கடாட்சம் பெற வேண்டும். 

ஆறாவது அடி : 

நாட்டில் நல்ல பருவங்கள் நிலையாக தொடர வேண்டும்.

ஏழாவது அடி : 

தர்மங்கள் நிலைக்க வேண்டும்.

இந்த சம்பிரதாயத்தில் மனிதர்களிடம் இருக்கும் மிகவும் சூசகமான மனோவியல் விஷயத்தை உணர்த்தியுள்ளார்கள் நம் முன்னோர்கள்.

இரண்டு நபர்கள் ஒன்றாக ஏழு அடிகள் நடந்தால் அவர்களுக்குள் சிநேகிதம் உண்டாகும் என்கிறது சாஸ்திரம். உதாரணமாக நாம் சாலையில் நடக்கும்போது அறிமுகமில்லாத ஒருவரை கடக்கும்போது சில விநாடிகள் ஒன்றாய் நடக்க நேர்ந்தால் நன்றாக கவனியுங்கள்.

ஏழு அடிகள் நடப்பதற்குள் நாம் அவர்களை வேகமாக தாண்டிவிடுவோம் அல்லது அவர்களை முன்னே போகவிட்டு விடுவோம். முழுமையாக ஏழு அடிகள் ஒன்றாக நடக்க மாட்டோம்.

இரண்டு மனிதர்கள் ஒன்றாக நடக்கும்போது அவர்களுக்குள் நடக்கும் மனோவியல் மாற்றங்கள் ஏழு அடிகளுக்குள்ளாக நடந்துவிடும் என்பது ஒரு சூசகமான விஷயம்.

இதை மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து அதை ஒரு சம்பிரதாயமாக வைத்திருப்பதை நாம் அனுபவித்து உணர வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

reasons for seven step in marriage


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->