2020.. வருடத்தின் முதல் சந்திர கிரகணம் இன்று.. மேலும் 3 சந்திர கிரகணம்.. எப்போது? - Seithipunal
Seithipunal


வானில் நிகழும் அதிசயங்களில் ஒன்று கிரகணம். இதில் சூரிய கிரகணத்தை விட சந்திர கிரகணம் அடிக்கடி நிகழும். சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வரும் நிகழ்வே 'சந்திர கிரகணம்" என்று அழைக்கப்படுகிறது. இது முழுமையான அளவு, பாதி அளவு, பெனும்ப்ரல் என மூன்று வகைகளில் தோன்றுகிறது.

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று நிகழ்கிறது. சந்திர கிரகணத்தை பொதுவாக 'வொல்ஃப் மூன் எக்ளிப்ஸ்" என்று அழைப்பார்கள். இது போன்று இந்த வருடத்தில் மேலும் மூன்று சந்திர கிரகணங்கள் நடைபெறவிருக்கிறது.

இந்த கிரகண காலத்தில் சந்திரன் முற்றிலும் இருளாகவோ அல்லது சிவப்பாகவோ மாறாது என்பதால், இதற்கு ஓநாய் சந்திர கிரகணம் என பெயர் சூட்டியுள்ளது நாசா.

2020ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று ஏற்படுகிறது.
இந்த ஆண்டில்

ஜூன் 5

ஜூலை 5 

நவம்பர் 30

ஆகிய நாட்களிலும் சந்திர கிரகணம் நிகழும் என கூறப்பட்டுள்ளது.

இன்றைய சந்திர கிரகணம் ஆண்டின் முதல் முழு நிலவு (ஓநாய் நிலவு) நாளில் நிகழ்வது குறிப்பிடத்தக்கது. இன்று இரவு 10.30 மணிக்கு மேல் தொடங்கி நாளை அதிகாலை 2.45 மணிக்குள் முடிகிறது. இது பெனும்ப்ரா வகையை சேர்ந்தது.

குறிப்பாக பூமியின் வெளிப்புற நிழல் மட்டும் விழும் என்று கூறப்படுகிறது. இதனையே பெனும்ப்ரா சந்திர கிரகணம் என்று அழைக்கின்றனர். இந்த வகை கிரகணங்கள் இந்த வருடத்தில் மொத்தம் நான்கு முறை நடைபெறவுள்ளது.

இந்த சந்திர கிரகணம் ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்காவின் கிழக்குப் பகுதி, அட்லாண்டிக், ஆர்டிக் பகுதிகளில் வெறும் கண்களாலேயே பார்க்க முடியும் என நாசா அறிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lunar eclipse 2020


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->