ஒரேயொரு வாய்ப்பு இலவசமாக... நீங்கள் சொக்கி போவதற்கு.!! நீங்கள் கண்டிடாத தமிழனின் பாரம்பரிய நாணயங்கள் மற்றும் உலக நாணயங்களின் அற்புத கண்காட்சி.!! - Seithipunal
Seithipunal


பண்டமாற்றம் முதல் பணமில்லா வர்த்தகம் வரை....

சேகரிப்பு கலையில் ஈடுபட்ட மூத்த சேகரிப்பாளர்களுக்கு பாராட்டுவிழா.....

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் உலக பணத்தாள்கள்., நாணயங்கள்., அஞ்சல் தலைகள் மற்றும் பழங்கால பொருட்கள் கண்காட்சியினை திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் இருக்கும் சீனிவாச மஹாலில்., வரும் ஜூன் மாதம் 14, 15 & 16 ம் தேதிகள் என்று 3 நாட்கள் நடைபெறவுள்ளது.

கண்காட்சியில் பழங்காசுகளின் வரலாறு., இந்தியப் பேரரசின் காசுகள்., பிரிட்டிஷ் இந்திய காசுகள்., குடியரசு இந்திய காசுகள்., பன்னாட்டு பணத்தாள்கள் மற்றும் காசுகள்., பழங்கால பொருட்கள்., அஞ்சல் தலைகள் காட்சிப் படுத்தப்படுகின்றன. கண்காட்சியையொட்டி பண்டமாற்றம் முதல் பணமில்லா பரிவர்த்தனை வரை ஈடுபட்டுள்ள மூத்த சேகரிப்பாளர்களை கௌரவிக்கும் விதமாக பாராட்டு விழா ஜூன் 14-ஆம் தேதி நடைபெறுகின்றது.

நாடு முழுவதும் சேகரிப்பாளர்கள் பலர் உள்ளார்கள். ஒவ்வொரு சேகரிப்பாளர்களும் தனது சேகரிப்பு கலையின் மூலம் பல்வேறு வரலாற்றுப் பதிவுகளை இளம் தலைமுறையினருக்கு எடுத்துரைக்கிறார்கள். பொதுவாக ஒரு நாணயம் பணத்தாள்கள் அல்லது பழங்கால பொருட்களானது பயன்படுத்தப்பட்ட காலங்கள்., ஆட்சியாளர்கள்., நிர்வாகம்., கலை மற்றும் பண்பாடு., கலாச்சாரம்., வரலாறு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை இன்றைய தலைமுறையினர் அறிய பல்வேறு வரலாற்று தகவல்களை வழங்குகிறது.

சேகரிப்பு கலையில் ஈடுபட்டுள்ளவர்கள் சேகரிப்பால் பல பழங்கால பொருட்கள் பாதுகாக்கப்படுவதுடன் ஆவணங்களாக காட்சிப்படுத்தப்பட்டு ஆய்விற்கு உதவுகின்றது. இதனால் பண்டமாற்றம் முதல் பணமில்லா வர்த்தகம் வரை சேகரிப்பு கலையில் ஈடுபட்டு உள்ள மூத்த சேகரிப்பாளர்களை கௌரவிக்கும் விதமாக திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்துகிறது

பள்ளி மற்றும் கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு சேகரிப்பு கலை அறிவு திறன் வினாடி வினா போட்டி..!!

"சேகரிப்புக் கலை என்பது அரும்பொருட்களைச் சேகரித்தல் ஆகும்"

அவற்றைக் காட்சிக்கு வைத்தல் அதன் வரலாற்றினை இளம் தலைமுறையினருக்கு எடுத்துரைத்து பழங்கால பொருட்களை பாதுகாக்கும் நோக்கங்களுக்காக கண்காட்சி நடத்தப்படுகிறது. இவை., மக்கள் மற்றும் அவர்கள் வாழ்ந்த சூழல் தொடர்பான சான்றுகளை அறியவும்., மனமகிழ்ச்சி., கல்வி., ஆய்வு போன்ற நோக்கங்களுக்காகச் சேகரிப்பதுடன்., அவற்றைப் பாதுகாத்தும்., ஆய்வுகளை நடத்தியும்., அதனை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தியும்., காட்சிப்படுத்தவும் உதவுகின்றன. இது சமுதாயத்தின் வளர்ச்சிக்கும்., அதன் சேவைக்குமானதாக உள்ளது.

பழம் பொருட்களின் மேல் ஆர்வம் கொண்டவர்கள்., தனிப்பட்டவர்கள்., குடும்பங்கள்., நிறுவனங்கள் போன்றவர்களால் சேகரிப்புக்களை அடிப்படையாகக் கொண்டு சேகரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படுகின்றன. சேகரிப்பு பொருட்களின் அறிவியல்., கலை., மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களைச் சேகரித்து., அதனை பாதுகாத்து., மக்களுடைய பார்வைக்காக காட்சிப்படுத்துகின்றனர்.

இந்த கண்காட்சியில்.,

நுண்கலைகள்., பண்பாட்டுக்கலைகள்., கைப்பணி., தொல்லியல்., மானிடவியல்., இன ஒப்பாய்வியல்., வரலாறு., பண்பாட்டு வரலாறு., படைத்துறை வரலாறு., அறிவியல்., தொழில்நுட்பம்., இயற்கை வரலாறு., நாணயவியல்., தாவரவியல்., விலங்கியல்., அஞ்சற்பொருள் சேகரிப்பு., பணத்தாள்கள் சேகரிப்பு போன்ற துறைகளுக்காகத் தனித்தனியாக சேகரிப்பாளர்கள் காட்சிப்படுத்துகிறார்கள்.

இதன்  தொன்மையான வரலாறு சமூகப் பொருளாதார வாழ்க்கை முறைகள் நாட்டுப்புற வாழ்விட முறைகள்., தொழில்நுட்ப வரலாறு., நாட்டுப்புற மக்களின் கலை., கலாச்சாரம்., பண்பாடு.,வரலாறு போன்றவற்றைக் காட்டும் விசயங்கள் இளம் தலைமுறையினரிடையே கொண்டு சேர்க்கும் வகையில்  பள்ளி மற்றும் கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு சேகரிப்பு கலை அறிவு திறன் வினாடி வினா போட்டி திருச்சியில் ஜீன் 14 ஆம் தேதி நடைபெறுகிறது.

போட்டியில் தபால் தலைகள்., நாணயங்கள்., பணத்தாள்கள்., பழங்கால பொருட்கள் குறித்த வினா கேட்கப்படும். சிறப்பாக விடையளிக்கும மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழும், பரிசுகளும் வழங்கப்படும். 

கற்காலம் முதல் கலர்ஃபுல் காலம் வரை காசு... பணம்... துட்டு.. மணி மணி... கண்காட்சி...!!

பள்ளி மற்றும் கல்லூரி மாணவ - மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் உலகப் பணத்தாள்கள் வரலாற்றினை ஒரே இடத்தில் அறிந்து கொள்ளும் வகையில்., திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் கற்காலம் முதல் கலர்ஃபுல் காலம் வரை காசு... பணம்... துட்டு.. மணி மணி... என பணத்தின் பரிமாண வளர்ச்சியினை உலகப் பணத்தாள்கள்., நாணயங்கள்., தபால் தலைகள் மற்றும் பழம் பொருட்கள் கண்காட்சி மூலம் இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் மூன்று நாட்கள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை கண்காட்சியினை நடத்துகிறது. 

பார்வையாளர்கள் அனைவருக்கும் அனுமதி இலவசம்...!!

காசு., பணத்தாள்கள்., காசோலை., வரைவோலை., கிரடிட் கார்டு., டெபிட் கார்டு., பண வடிவ மற்ற பிட்காய்ன்கள் என பணம் பல வடிவமாற்றங்களில் பயன்பாட்டில் உள்ளது. கற்காலத்தில் பணம் என்ற வார்த்தை இல்லை. பண்டமாற்று முறை தான் இருந்தது. தற்போதும் பழைய துணிக்கு பாத்திரங்கள் வழங்கும் பண்டமாற்று முறை உள்ளது குறிப்பிடத்தக்கது.

பழங்காலத்தில் குன்றிமணி., சோழினைக் கூட நாணயங்கலாக பயன்படுத்தி உள்ளனர். இந்தியாவில் கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் இருந்து முத்திரை காசுகள் புழக்கத்தில் உள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சங்க காலத்தில் தென்னிந்தியாவை ஆண்ட அரசர்களான சேர, சோழ மற்றும் பாண்டிய மன்னர்கள் தங்கள் சின்னங்களான வில்., மீன் மற்றும் புலி உள்ளிட்டவற்றை முத்திரைக் காசாக அச்சிட்டனர். சங்க காலத்திற்கு பின் தமிழ் எழுத்துக்களுடன் பல்லவர் காலத்து காசுகளும் அதன் பின் வெளிவந்த காசுகளும் காட்சிப்படுத்தப்படுகின்றன.

அர்ஜென்டினா., அர்மேனியா., ஆஸ்டிரியா., அல்ஜீரியா., ஆஸ்திரேலியா., ஆப்கானிஸ்தான்., பல்கேரியா., பஹ்ரைன்., புரூனே., போஸ்னியா., பகாமாஸ்., பங்களாதேஷ்., பூட்டான்., பெல்ஜியம்., பிரேசில்., பர்படாஸ்., செக்கோஸ்லோவாகியா., கேமன் தீவு., சைனா., கேப் வெர்டி., கனடா., சைப்ரஸ்., கோஸ்டோரிகா., செக் குடியரசு., டென்மார்க்., கிழக்கு கரீபியன் தீவு., இங்கிலாந்து., ஜெர்மணி., எத்தியோப்பியா., எகிப்து., பல்க் தீவு., பின்லாந்து., பிரான்ஸ்., பிஜு தீவு., கேம்பியா., கிரீஸ்., ஜெர்சினி., ஹாங்காங்., ஹோண்டுராஸ்., ஹங்கேரி., அயர்லாந்து., இந்தோனேசியா., ஈராக்., இஸ்ரேல்., இத்தாலி., ஈரான்., ஐஸ்லாந்து., ஜப்பான்., ஜமைக்கா., ஜோர்டான்., ஜெர்சி., கஜஹஸ்திஸ்தான்., குவைத்., லெபனான்., லித்துவேனியா., முராக்கோ., மெக்சிகோ., மாலத்தீவு., மலேசியா., நேபாளம்., நெதர்லாந்து., ஓமன்., போர்ச்சிகல்., பனாமா., பிலிப்பைன்ஸ்., கத்தார்., ரஷ்யா., சிங்கப்பூர்., சவுதி அரேபியா., சிரியா., தாய்லாந்து., உகாண்டா உள்ளிட்ட 200 உலக நாடுகளின் பணத்தாள்கள்., நாணயங்கள் மற்றும் தபால் தலைகளை ஒரே இடத்தில் காட்சிப்படுத்தி அதன் வரலாறு., கலாச்சாரம்., பண்பாடு மற்றும் பொருளாதாராம் குறித்து எடுத்துரைக்கின்றனர்.

நாணயக் கண்காட்சியில் பிரிட்டிஷ் இந்தியா நாணயங்களில் வில்லியம் IV (1830-1837)., ராணி விட்டோரியா (1834-1901)., எட்வர்டு VII (1901-1910)., ஜார்ஜ் V (1911-1936)., ஜார்ஜ் VI (1936- 1947)., உள்ளிட்ட ஆண்டுகளில் வெளியான 1/12, 1/2, 1, 2, 4,8 அணா., பைஸ்., காலணா., ஓட்டை ஒரு பைசா., அரையனா உள்ளிட்ட மதிப்பிலான செம்பு., வெள்ளி., பித்தளை., நிக்கல் உள்ளிட்ட உலோகங்களில் வட்டம்., சதுரம்., அறுகோண வடிவங்களில் உள்ள நாணயங்கள் காட்சிபடுத்தப்படுகின்றன.

குடியரசு இந்தியா பொது பயன்பாடு நாணயங்களும்., நினைவார்த்த நாணயங்களும் காட்சிப்படுத்தப்படுகின்றன. சோமாலியா நாட்டில் வெளியிட்ட கிட்டார்., இசைக்கருவி., கார்., விலங்குகள் வடிவிலான நாணயங்கள் காட்சிப்படுத்தப் படுகின்றன. மலேசிய நாடு வெளியிட்ட உலகிலேயே பெரிய பணத்தாள் காட்சிப்படுத்தப்படுகின்றன.

பள்ளி மற்றும் கல்லூரி., ஆய்வு மாணவர்கள்., பணத்தாள்கள்., நாணயங்கள்., தபால் தலைகள்., பழம் பொருட்கள் சேகரிப்போர் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் நிகழ்வில் பங்கேற்கிறார்கள். உலகப் பணத்தாள்கள்., நாணயங்கள்., தபால் தலைகள்., பழங்காலப் பொருட்கள் சேகரிப்பாளர்கள் தங்களது சேகரிப்பினை காட்சிப்படுத்தி விளக்க உள்ளார்கள் என திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார்., செயலர் குணசேகர்., பொருளாளர் அப்துல்அஜீஸ்., முகமது சுபேர்., பாண்டி., கமலக்கண்ணன் மற்றும் சந்திரசேகரன் உள்ளிட்ட நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்துள்ளனர். மேலும் விவரங்களுக்கு 98424 12247 அலைபேசியில் தொடர்பு கொள்ளவும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in trichy old coins and money papers festival coming month by triuchirappalli notaphily society


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->