பெண்களே ஜல்லிக்கட்டு விளையாட ரெடியா?! - Seithipunal
Seithipunal


சபரிமலைக்கு பெண்கள் போகலாமா? வேண்டாமா? என்ற சர்ச்சை பல ஆண்டுகளாக இருக்கின்றது.  இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு பின், ‘சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும்’ என்று கடந்த செப்டம்பர் 28-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.


 
கோவிலின் சம்பிரதாயத்திற்கு எதிரான இந்த தீர்ப்பை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சிகளும், இந்து அமைப்புகளும் பல ஐயப்ப பக்தர்களும் அங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர். ஐயப்பனை தரிசிக்க வரும் பெண்களும் விரட்டியடிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் "பெண்களை அனுமதிக்க வேண்டிய அவசியமில்லை" என கேரள பெண்களே போராட்டம் செய்து வருகின்றனர். ஆனால், சில பெண்ணியவாதிகள் "எங்களுக்கு சம உரிமை உள்ளது. நாங்கள் செல்ல அனுமதிக்க வேண்டும்" என போராட்டம் செய்து கொண்டுள்ளனர். 

மேலும், சில பெண்கள் கோவிலின் விதிகளுக்கு கட்டுப்படாமல் சென்று தற்பொழுது தரிசித்து வந்து விட்டதாக தகவல்கள் வெளியாகின்றன. இந்நிலையில் அய்யப்ப பக்தர் ஒருவர் 'சபரிமலையில் மட்டும் தான் உங்களுக்கு சம உரிமை வேண்டுமா? அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிற்கு  வாருங்கள், சம உரிமை வழங்குகிறோம்' என நக்கல் செய்யுமாறு அமைந்துள்ள காணொளி தற்பொழுது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

இதனால், இதனை காணும் சில பெண்கள் அதிருப்திகளுக்குள்ளாகி இருப்பதாக தெரிகிறது. மேலும், அவ்வாறு கூறும் அந்த நபருக்கு சிலர் ஆதரவான கமெண்டுகளை வழங்கி வருகின்றனர். 

English Summary

if girls want to play jallikattu


கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
Seithipunal