புஷ்பத்தை கொண்டு விளக்கை அணைக்கலாமா.? - Seithipunal
Seithipunal


விளக்கை குளிர வைத்தல் :

விளக்கை எக்காரணத்தைக் கொண்டும் வாயால் ஊதி அணைக்கக்கூடாது. கையால் வீசியும் அணைக்கக்கூடாது. புஷ்பத்தைக் கொண்டும் குளிரவைக்கக்கூடாது. புஷ்பத்தை நெருப்பில் கருகக்கூடாது. திரியை உட்பக்கமாக இழுத்துக் குளிர வைப்பதே நன்மை தரும்.

விளக்கில் பயன்படுத்தப்படும் திரியும் அவற்றின் பயன்களும்:

பஞ்சுத் திரி - மகிழ்ச்சி உண்டாகும்.

தாமரைத் தண்டு திரி - நிலைத்த செல்வம் உண்டாகும்.

வாழைத் தண்டு திரி - மன அமைதி உண்டாகும்.

Tamil online news Today News in Tamil

மஞ்சள் துணித் திரி - செய்வினை கோளாறுகள் நீங்கும்.

சிவப்பு துணித் திரி - இனிய குடும்ப வாழ்க்கை அமையும்.

வெள்ளைத் துணித் திரி - செல்வம் மற்றும் செல்வாக்கு உண்டாகும்.

திருவிளக்குத் துளிகள்:


வாரம் ஒருமுறையாவது விளக்கை சுத்தம் செய்ய வேண்டும்.

வீட்டில் உள்ள சுமங்கலி பெண்கள் விளக்கை ஏற்றி பூஜை செய்வது சிறப்பு.

விளக்கில் உள்ள எல்லா முகங்களிலும் தீபம் ஏற்ற வேண்டும்.

திருவிளக்குக்கு சந்தனம், குங்குமம் வைத்து பொட்டிட்ட பிறகே விளக்கு ஏற்ற வேண்டும்.

விளக்கில் எப்போதும் குளம் போல் எண்ணெய் இருந்து கொண்டே இருக்க வேண்டும். 

எக்காரணம் கொண்டும் தெற்கு திசையை நோக்கி விளக்கு ஏற்றக்கூடாது.

வீட்டில் காலை, மாலை விளக்கேற்றுவதால் சகல சுபிட்சங்களும் உண்டாகும்.

வீட்டில் உள்ள திருவிளக்கை வெறும் தரையில் வைக்கக்கூடாது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to off the lights


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->