பிறந்த நாள் விழா.... எப்படியெல்லாம் கொண்டாடலாம்?! - Seithipunal
Seithipunal


பிறந்த நாள் விழா...!

பிறந்த நாள் ஒருவரின் பிறந்த தேதியை கொண்டாடும் நாள் அல்லது ஆண்டுவிழா ஆகும். பல பண்பாடுகளிலும் பிறந்த நாள் பரிசு, விருந்து அல்லது சமயச்சடங்குகளுடன் கொண்டாடப்படுகின்றன.

பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி. ஏழையாக இருந்தாலும், பணக்காரராக இருந்தாலும், நகரத்தில் வாழ்பவராக இருந்தாலும், கிராமத்தில் வாழ்பவராக இருந்தாலும் அனைவருக்கும் பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது ஒரு முக்கியமான நிகழ்ச்சியாகி விட்டது.

பிறந்த நாள் விழா தோன்றியது எப்படி?

அந்தக்காலத்தில் எல்லாம் குழந்தை பிறப்பதற்கு 15 நாட்கள் முன்னாடியே சொந்த பந்தம், ஊர்க்காரர்கள் என்று ஒரு பெரிய கூட்டமே வீட்டுக்கு வருவார்கள். ஏழு வயசுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பிறந்த நாள் என்றால் மூன்று நாட்களுக்கு முன்னாடியே அந்த குழந்தைக்கு பலகாரம், சிறிய தின்பண்டங்கள், விளையாட்டு பொருட்கள் என நிறைய பொருட்களை வீட்டிற்கு கொண்டு வருவார்கள்.

இவ்வாறு கூட்டமாக கூடி கூத்து, கும்மாளம், பாட்டு சத்தம் என அந்த வீடே கொண்டாட்டமாகத்தான் இருக்கும். பிறந்த நாளன்று அந்த குழந்தையை குளிக்க வைத்து புதுத்துணி உடுத்தி, பிறகு இறைவணக்கம் சொல்லி, பாட்டு, பஜனை எல்லாம் பாடி, சாமி கும்பிடுவார்கள். பின்பு எல்லோரும் வாழ்த்துக்கள் கூறி நலுங்கு வைத்து ஆசியும் வழங்குவார்கள். 

அந்த குழந்தையின் நெற்றியில் திருநீறு வைத்தும், பூக்களை தூவியும் எப்போதும் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என வாழ்த்துக்கள் கூறுவார்கள். இவ்வாறு வாழ்த்திய பிறகு அந்த குழந்தைக்கு பரிசுகளையும் வழங்குவார்கள். இப்படி பழங்காலத்தில் தோன்றிய ஒரு சம்பிரதாயம் தான் இந்த பிறந்த நாள் விழா.

எப்படியெல்லாம் கொண்டாடலாம்?

பிறந்த நாளன்று காலையில் இறைவனை வணங்கலாம். அம்மா, அப்பா மற்றும் மூத்தோரிடம் வாழ்த்துக்கள் பெறலாம்.

நண்பர்களுக்கு கேக், இனிப்புகள் கொடுக்கலாம். கூடவே மரக்கன்றுகள் கொடுத்துக் கவனமாக அவற்றை வளர்க்க வேண்டும் என்று சொல்லலாம்.

நமது ஊரின் பொது நூலகத்திற்கும், நமது பள்ளி மற்றும் கல்லூரி நூலகத்திற்கும் புத்தகங்கள் பரிசாகக் கொடுக்கலாம்.

நமக்குப் பரிசு கொடுப்பவர்களைப் புத்தகங்களாக வாங்கிக் கொடுக்கச் சொல்லலாம். கூடவே அவற்றைக் கவனமாகப் படிக்க வேண்டும்.

நம்மால் முடிந்த வரையில் நமது நகரில் இருக்கும் ஆதரவற்றோர் இல்லம், முதியோர் இல்லம் போன்ற பொதுநல அமைப்புகளுக்கு பணமாகவோ, பொருளாகவோ நன்கொடை கொடுக்கலாம். 

நாமும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், நம்மால் மற்றவர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே நம் பிறப்பின் நோக்கம் என்பதே பிறந்த நாள் கொண்டாட்டம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to celebrate birthday Function 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->