இன்றைய நாள்... வரலாறு யாரை சிறப்பிக்கிறது?! வரலாற்றில் அழியாப் புகழ் பெற்றவர்கள்.! - Seithipunal
Seithipunal


எம்.பி.என்.பொன்னுசாமி:

தில்லானா மோகனாம்பாள் படத்தில் வருகின்ற நலம்தானா? என்கிற பாடலுக்கு நாதஸ்வரம் வாசித்தவர்களில் ஒருவரான எம்.பி.என்.பொன்னுசாமி 1933ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி மதுரையில் பிறந்தார்.

நமக்கெல்லாம் அந்த இனிய இசையை வழங்கிய மற்றொருவர் நாதஸ்வரக் கலைஞரான எம்.பி.என்.சேதுராமன் (எம்.பி.என்.பொன்னுசாமி சகோதரர்) ஆவார். பொன்னுசாமி ஒன்பதாவது வயதில் இருந்து தனது சகோதரருடன் இணைந்து இசை நிகழ்ச்சிகளை செய்யத் தொடங்கினார்.

இவர் கலைமாமணி விருது, நாதஸ்வர கலாநிதி, சங்கீத சூடாமணி விருது, இசைப்பேரறிஞர் விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார்.ஆச்சார்ய கிருபளானி

இன்று இவரின் நினைவு தினம்..!

காந்தியத்தை பரப்பிய ஜீவித்ராம் பகவன்தாஸ் கிருபளானி 1888ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி ஹைதராபாத்தில் பிறந்தார்.

இவர் கல்லூரியில் படிக்கும்போது, 'இந்தியர்கள் பொய்யர்கள்" என்று கூறியதற்காக மாணவர்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தினார்.

இவர் மகாத்மா காந்தி நிறுவிய குஜராத் வித்யாபீடத்தின் முதல்வராக பணியாற்றினார். இவர் வாழ்நாள் முழுவதும் காந்தியவாதியாகவே திகழ்ந்தார். ஒத்துழையாமை இயக்கம், உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகியவற்றில் கலந்துகொண்டு, பலமுறை சிறை சென்றுள்ளார்.

இவர் இந்திய தேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளராக பணியாற்றினார். 1946ஆம் ஆண்டு அதன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸிலிருந்து விலகி கிஷான் மஸ்தூர் பிரஜா பார்ட்டி என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார்.

இவர் நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.

அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்தாலும் சமூகம், சுற்றுச்சூழல் நலன்களுக்காகவும் பணியாற்றிய இவர் 1982ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்:

1932ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி சிட்னி துறைமுகப்பாலம் திறந்து வைக்கப்பட்டது.

2008ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி இந்திய திரைப்பட நடிகர் ரகுவரன் மறைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

History of march 19 2020


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->