விஜயகாந்தை நேரில் சந்தித்த யோகிபாபு.! வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி.!  - Seithipunal
Seithipunal


வரும் 5-ம் தேதி சென்னையில் நடிகர் யோகிபாபுவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கின்றது. ரஜினிகாந்த் உட்பட பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் யோகிபாபு. இவர் ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகின்றார்.

சமீபத்தில் இவருக்கு பார்க்கவி என்ற பெண்ணுடன் குலதெய்வ கோவிலில் வைத்து எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. மணமகள் மற்றும் மணமகன் வீட்டினர் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். 

திருமணத்திற்குப் பின்னர் தான் கால்ஷீட் கொடுத்திருந்த படங்களில் நடித்து முடித்த யோகிபாபு, தற்போது திரைத்துறை பிரபலங்கள் அனைவரையும் அழைத்து தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு இருக்கிறார். 

வருகின்ற ஐந்தாம் தேதி சென்னையில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து திருமண வரவேற்பு நிகழ்விற்கான அழைப்பிதழை நடிகர் யோகிபாபு கொடுத்தார். அப்பொழுது விஜயகாந்துடன் இயக்குனர் முத்துக்குமார் மற்றும் விஜய பிரபாகரன் ஆகியோர் இருந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

yogibabu met with vijayakanth


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->