யாஷிகா திருமணம் செய்ய போகும் நடிகர் இவர்தானாம்.! - Seithipunal
Seithipunal


இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதன் பின்னர் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார். 

அந்த சீசனில் டைட்டில் வின்னராக வரும் அளவிற்கு அவருக்கு மக்களின் ஆதரவு இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு யாஷிகா நிறைய படங்களில் நடித்து வருகிறார். ஆரவ்வுடன் ராஜபீமா, மகத்துடன் உத்தமன் ஆகிய படங்கள் தவிர, அவர் கைவசம் நிறைய படங்கள் உள்ளன. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த படம் ஜாம்பி.

தொடர்ந்து சமூகவலைதளப் பக்கங்களில் தனது கவர்ச்சிப் படங்களைப் பதிவேற்றி பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இதை தொடர்ந்து இவரை இம்ப்ரெஸ் செய்ய வேண்டும் என்றல் இந்த மாதிரி தான் இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். 

இது குறித்து அவர் கூறுகையில், "பசங்க என்னை இம்பிரஸ் செய்ய வேண்டுமானால் நல்ல பர்ஃப்யூம் போட்டிருக்க வேண்டும். நல்ல உயரமாக இருக்க வேண்டும். தாடி இருக்க வேண்டும். டாட்டூஸ் போட்டிருக்க வேண்டும். முக்கியமாக தெலுங்கு பேசத் தெரிந்திருக்க வேண்டும்.

மேலும் அவர், எனக்கு விஜய் தேவர்கொண்டாவை மிகவும் பிடிக்கும். தெலுங்கு சினிமா உலகில் இருந்து யாரை திருமணம் செய்து கொள்வீர்கள் என்றுக் கேட்டால் அவரைத்தான் சொல்வேன். தமிழ் சினிமாவில் எனக்கு யாரையும் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை", என்று யாஷிகா தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

yaashika anadh wants to marry


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->